தேனி மாவட்டம் பி.துலுக்கப்பட்டியில் சுமூக சூழலை காவல்துறை ஏற்படுத்த வேண்டும்..! பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த மஜக துணைப் பொதுச்செயலாளர்..!

தேனி.மே.10., தேனி மாவட்டம் பி.துலுக்கப்பட்டியில் கடந்த சில தினங்கள் முன்பு இருதரப்புக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவாக அங்கு பெரும் வன்முறை கலவரம் ஏற்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்களை நேற்று நேரில் சந்தித்த #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி அவர்கள், மஜக தேனி மாவட்ட செயலாளர் ரியாஸ், தேனி மாவட்ட துணைசெயலாளர் கம்பம் கலில், பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் ரஹ்மான், கம்பம் நகர நிர்வாகி அரபாத், மற்றும் மஜக பெரியகுளம் நிர்வாகிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். .

பி.துலுக்கப்பட்டி கிராமத்தில் முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், அங்கு நிலவும் நல்லிணக்கத்தை விரும்பாத சிலர் தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம்களிடையே கோபத்தை ஏற்படுத்தும் வகையிலான வாசகம் கொண்ட பேனரை சிலர் கட்டியுள்ளனர். அந்த குறிப்பிட்ட சம்பவத்தால் இரு சமூகத்திற்கிடையே பிரச்சினை எழும் என்று காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறை மெத்தனமாக இருந்துள்ளது. தொடர்ந்து அங்கு இது தொடர்பாக அவ்வப்போது வாய்த்தகராறு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகி வந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இறந்த ஒருவரின் சவ ஊர்வலம் ஒன்றை வழக்கமான பாதையை விடுத்து, சிலரின் தூண்டுதலால் முஸ்லிம்களின் பகுதி வழியாக கொண்டு சென்றதோடு, முஸ்லிம்களின் அடக்கஸ்தலத்தில் தங்களுக்கும் உரிமை உள்ளது என்று கூறி அங்கு மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளனர்.

இதற்கிடையே தனது தோட்டத்திற்கு சென்ற முஸ்லிம் ஒருவரை வழிமறித்து பிரச்சினை செய்யவே மீண்டும் இருதரப்பு பிரச்சினை ஏற்பட்டு, அது பெரும் வன்முறை கலவரமாக மாறியுள்ளது.

பெண்கள், முதியவர்கள் இந்த வன்முறை தாக்குதலால் படுகாயமடைந்துள்ளனர். வீடுகள், கடைகள், வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இரு தரப்புக்கு இடையிலான பிரச்சினையில் ஆரம்பத்திலேயே காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை தடுத்திருக்க முடியும். இந்த விவகாரத்தில் இரு சமூக மக்களிடையே நிலவி வந்த நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்த நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததன் விளைவே இத்தகைய பிரச்சினைக்கு காரணம்.

இச்சம்பவத்தின் பின்னால் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரும், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஒருவரும் உள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளையில், வன்முறை நிகழ்ந்த பிறகு ஒருதலைபட்சமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை இதனை சரிசெய்யும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இரு சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அங்கு தொடர்ந்து சுமூகமான சூழல் நிலவும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மஜக துணைப் பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களை பேசவைத்தார் .

அதன் அடிப்படையில் நேற்று இரவு முதல்வரை சந்தித்து பொதுச்செயலாளர் அவர்கள் அரசுக்கு இந்த கலவரம் சம்பந்தாக கோரிக்கை வைத்தார்கள்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தேனி_மாவட்டம்
09.05.2018