(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) உத்திரபிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவமனைக் கல்லூரியின் மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் தொடர்ச்சியாக 72 குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் கதறல் அனைவரையும் உலுக்குகிறது. இதில் நீண்ட காலம் குழந்தைகளே இல்லாமல் தவமிருந்து பெற்ற குழந்தைகள் , நீண்ட இடைவெளைக்குப் பிறகு பெற்றக் குழந்தைகள் என அனைவரும் அடக்கம் என்பதை எண்ணும்போது அந்த பெற்றோர்களின் துயரம் நமது கண்களையும் குளமாக்குகிறது. எதிர்காலத்தில் ஆற்றல் மிக்க பல்துறை வல்லுனர்களாகவோ, அல்லது வாழ்வின் ஏதோ ஒரு முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் நட்சத்திரங்களாகவோ வரவேண்டும் அந்த மழலைகளை நமது நாடு பறிகொடுத்திருக்கிறது. இந்த நாட்டை வல்லரசாக்க வேண்டும் என துடிக்கும் ஆட்சியாளர்கள் முதலில் உயர் தரமிக்க மருத்துவமனைகளையும், அறிவுசார் கல்வி நிலையங்களையும் உருவாக்க வேண்டும் என்பதைத்தான் இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. மாட்டை பாதுகாப்போம் என போலி வகுப்புவாத அரசியல் நடத்தும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் அம்மாநில மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகம்
தமிழகம்
மஜக பொதுச்செயலாளருடன் இயக்குநர் தங்கர்பச்சன் சந்திப்பு!
வேதாரண்யம்.ஆக.13., இன்று தோப்புத்துறையில் மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களை அவரது இல்லத்தில் இயக்குநர் தங்கர்பச்சன் சந்தித்தார். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களுக்காகவும் , தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும் தொடர்ந்து சட்டசபையில் பேசிவருவது தொடர்பாக தனது பாராட்டுக்களை கூறியவர் , சட்டசபையில் நான் பார்க்கும் ஒரே உணர்வுள்ள தமிழர் நீங்கள் தான் என்றும் கூறி வாழ்த்தினார். தொடர்ந்து சமரசமின்றி இயங்குமாறும், தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களை கூர்ந்து கவனித்து வருவதாகவும் கூறினார். அரை மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பின்போது மஜக துணை பொதுச் செயலாளர் மதுக்கூர்.ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜுதீன், மாநில துணைச்செயலாளர் சேக் அப்துல்லா, நாகை தெற்கு மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், வேதை நகர செயலாளர் சேக் அகமதுல்லாஹ், துபாய் மண்டல நிர்வாகி அப்துல் ரெஜாக் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING வேதை நகரம் (நாகை தெற்கு மாவட்டம்) 13_08_17
மஜக மதுரை வடக்கு கருப்பாயூரணி பகுதி ஆலோசனை கூட்டம்…
மதுரை.ஆக.13., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்ட அலுவகத்தில் மாவட்ட செயலாளர் பி.எம் சேக் அகமது அப்துல்லா தலைமையில் மதுரை கருப்பாயூரணி பகுதி சார்ந்த மஜக நிர்வாகிகள் இடம் கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசனை நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட துணை செயலாளர் E.N.K.ஷாஜஹான், மாவட்ட இளைஞரணி செயலாளர் M.அலாவுதீன், மாவட்ட பொருளாளர் N.ராஜா முஹம்மது முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாணவர் இந்தியா செயலாளர் E.N.K.ஜாபர், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் அப்பாஸ், பகுதி செயலாளர் அஸ்ரப் அலி, கிளை செயலாளர் அமானுல்லா ஆகியோர் கலந்து கொண்டார்கள். கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது... 1. கருப்பாயூரணி பகுதியில் மஜக ஒன்றிய அலுவலகம் விரைவில் திறப்பது எனவும், 2.சுற்று வட்டாரங்களில் அதிகமாக மஜக கொடி ஏற்றதால் எனவும், 3. ஒன்றியம் முழுதும் அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது எனவும், 4 கருப்பாயூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மஜக கிளை அமைப்பது என்றும் ஏக மனதாக முடிவு செய்யபட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING மதுரை வடக்கு மாவட்டம். 13.08.17
எழுச்சியுடன் நடைபெற்ற மஜக பொள்ளாச்சி நகர கொடியேற்றுவிழா மாநில பொருளாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்பு!
கோவை.13.ஆக., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர கொடியேற்று விழா நகர செயலாளர் ராஜா ஜெமீஷா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில பொருளாளர் S.S.ஹாருண் ரஷீது அவர்களின் தலைமையில், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் AK.சுல்தான் அமீர், மன்னை செல்லச்சாமி, மாநில துணை செயலாளர் A.அப்துல் பஷீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் சாந்து முகம்மது, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர் TMS.அப்பாஸ், மனிதநேய ஜனநாயக வணிகர்சங்க மாவட்ட செயலாளர் அக்பர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் 15இடங்களில் கட்சி கொடியேற்றிவைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்வில் வணிகர் சங்க மாவட்ட துணை செயலாளர் லீட்ஸ் பஷீர் மற்றும் பொள்ளாச்சி நகரம் ஒன்றியம் மற்றும் வார்டு நிர்வாகிகள் கலந்துகொண்டனர், இந்நிகழ்சிக்காக பொள்ளாச்சி சுற்றழவில் சுமார் 10மைல் தூரத்திற்கு கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டு மாநாடு போன்ற பிரமிப்பை தந்தது. இந்நிகழ்வில் தனியரசு MLAஅவர்களின் கொங்கு இளைஞர்பேரவை பொள்ளாச்சி நகர நிர்வாகிகள் மஜகவின் அனைத்து நிகழ்வுகளிலும்
பொள்ளாச்சியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர்பேரவை தனியரசு MLA சார்பாக மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு…!
கோவை.ஆக.13., பொள்ளாச்சி நகரத்திற்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் அவர்களுக்கு பொள்ளாச்சி நகர கொங்கு இளைஞர் பேரவை தனியரசு MLA அவர்கள் சார்பாக வரவேற்பு. கொங்கு பேரவை பொள்ளாச்சி நகர செயலாளர் மாரிமுத்து, நகர இளைஞர்அணி செயலாளர் தாமோதரன், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பை அளித்தார்கள். உடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான், மன்னை செல்லசாமி, மாநில துணை செயலாளர் பஷிர், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, கோவை மாவட்ட நிர்வாகிகள், பொள்ளாச்சி நகர செயலாளர் ஜமிஸ், பொள்ளாச்சி நகர நிர்வாகிகள் இருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கோவை மாவட்டம். 13.08.2017.