எழுச்சியுடன் நடைபெற்ற மஜக பொள்ளாச்சி நகர கொடியேற்றுவிழா மாநில பொருளாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்பு!

image

image

image

கோவை.13.ஆக., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர கொடியேற்று விழா நகர செயலாளர் ராஜா ஜெமீஷா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில பொருளாளர் S.S.ஹாருண் ரஷீது அவர்களின் தலைமையில், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் AK.சுல்தான் அமீர், மன்னை செல்லச்சாமி, மாநில துணை செயலாளர் A.அப்துல் பஷீர்,
மாநில கொள்கை விளக்க
அணி செயலாளர் சாந்து முகம்மது, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர் TMS.அப்பாஸ்,
மனிதநேய ஜனநாயக வணிகர்சங்க மாவட்ட செயலாளர்
அக்பர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா,
தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் 15இடங்களில் கட்சி கொடியேற்றிவைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் வணிகர் சங்க மாவட்ட துணை செயலாளர் லீட்ஸ் பஷீர் மற்றும் பொள்ளாச்சி நகரம் ஒன்றியம் மற்றும் வார்டு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்,

இந்நிகழ்சிக்காக பொள்ளாச்சி சுற்றழவில் சுமார்  10மைல் தூரத்திற்கு கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டு மாநாடு போன்ற பிரமிப்பை தந்தது.

இந்நிகழ்வில் தனியரசு MLAஅவர்களின்  கொங்கு இளைஞர்பேரவை பொள்ளாச்சி நகர நிர்வாகிகள் மஜகவின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

நிறைவுறையாற்றிய
மாநில பொருளாளர் SS.ஹாருண் ரஷீது அவர்கள் சிறப்பாக பணிகளை செய்த பொள்ளாச்சி நகர நிர்வாகிகளுக்கும் நிகழ்வில் பங்கேற்ற கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகளுக்கும் தலைமையின் சார்பில் நன்றி தெரிவித்தார்.

பின்னர் மஜக வணிகர்சங்க நகர நிர்வாகியின் இல்ல திருமணத்தில் பங்கேற்று சிறப்பித்தார் அவருடன் மாநில நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் பொள்ளாச்சி நகர நிர்வாகிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்!!!

தகவல்:
#மஜக தகவல் தொழில்நுட்பஅணி
#MJK IT WING
கோவை மாநகர் மாவட்டம்
13.08.17