தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA ஆகியோர் கலைஞரை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்…

image

சென்னை: நவ.16.,நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது கருணாஸ் MLA ஆகியோர் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

கலைஞர் இல்லத்திற்கு வந்த அவர்களை முன்னாள் அமைச்சர் எ.வா. வேலு அவர்கள் வரவேற்று உபசரித்தார். பிறகு அவரும் கலைஞர் அவர்களின் மகன் மு.க.தமிழரசு அவர்களும், திருமதி.செல்வி அவர்களும் மாடிக்கு அழைத்து சென்றனர். மூன்று MLA க்களும் தங்களை பார்க்க வந்துள்ளனர் என்று செல்வி அவர்கள் கலைஞர் அவர்களின் காதில் கூறினார்.

முகமலர்ச்சியடைந்த கலைஞரின் கரங்களை மூன்று பேரும் பற்றி பிடித்து நலம் விசாரித்தனர். உதடு சுழித்து புன்னகைத்த  கலைஞர் வாழ்த்து கூறி கைகொடுத்தார்.

5முதல் 8நிமிடங்கள் வரை நடைபெற்ற உணர்ச்சிமயமான சந்திப்பின் இறுதியில் ,மூவரும் விடைபெற்றபொது கலைஞர் கை தூக்கி வாழ்த்தினார்.

விடைபெறும் பொது கலைஞரின் மகள் செல்வி அவர்கள் மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம்,  T.V.பேட்டிகள் உங்கள் விவாதங்கள், எனக்கு பிடிக்கும். நன்றாக இருக்கிறது என பாராட்டினார்.

மிகுந்த நெகிழ்ச்சியுடன் கலைஞர் வீட்டை விட்டு வெளியே வந்ததும், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்தியாவின் முதுபெரும் தலைவரும், சமூக நீதி போராளியுமான கலைஞர் அவர்களை உடல்நலம் விசாரிக்க. இதில் அரசியல் நோக்கம் இல்லை என்று மஜக பொதுச்சயளாலர் தமிமுன் அன்சாரி கூறினார்.

செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் மூன்று போரையும் அழைத்து வீட்டிற்கு வந்து தேனீர் அருந்தி செல்லுமாறு அழைத்தார்.

அழைப்பை ஏற்று மூன்று  தலைவர்களும் எ.வ. வேலு அவர்களுடன் சென்று மரியாதை நிமித்தமாக அரை (1/2) மணிநேரத்திற்க்கும் மேலாக  உறையாடினார்கள்.

இச்சந்திப்பில் திரு. துரைமுருகன் அவர்களும் மஜக மாநில செயளாலர் தைமியா, சீனி முகம்மது ஆகியோரும் உடன் இருந்தனர்.

கலைஞர் அவர்களின் நெகிழ்ச்சியாக வாழ்வியல் சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.

தற்போது கலைஞர் அவர்களின் இரங்கள் செய்திகள், வாழ்த்து அறிக்கைகள் ஆகியவற்றை நூல்களாக வெளியிட வேண்டும் என்று தளபதி மு.க ஸ்டாலின் அவர்களிடம், தமிமுன் அன்சாரி தனது விருப்பத்தை தெரிவித்தார். இதை அவரும் ஒத்துக்கொண்டார். அவருடன் உடன் இருந்த துரை முருகன் அவர்களும் அதன் முக்கியதுவத்தை உணர்ந்து அதை வரவேற்றார்.

அதுபோல முரசொலி பவளவிழா மலர் தயாரிப்பு மிகவும் அருமையாக இருந்தது என மஜக பொதுச்செயளாலர் பாராட்டி கூறினார்.

இதுபோல கலைஞர் முன்பு முதுகுதண்டுவட அறுவைசுகிச்சைக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டபோது. முரசொலியில் எழுதிய மருத்துவமனை குறிப்புகளையும் நூலாக வெளியிட ஆவணம் செய்யுங்கள் என மஜக பொதுச்செயளாலர் கூறியதையும் ஏற்றுகொண்டனர்.

#தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை.
16.11.17