கடலூர்.ஆக.27., நெய்வேலியில் நேற்று முன்தினம் 25/08/17 வெள்ளியன்று பல்வேரு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள். ஜூம்மா தொழுகைக்காக நெய்வேலி மஸ்ஜித் ரஹ்மத் பள்ளிவாசலுக்கு சென்றார் இதை அறிந்த பள்ளி நிர்வாகிகள் தொழுகை முடிந்தவுடன் பள்ளியில் மஜக பொருளாளரை வரவேற்று சிறப்புரை நிகழ்த்தினார்கள். பிறகு ஜமாத்தலைவர் ஹாஜி S.M.அபுபக்கர் அவர்கள் தலைமையில் ஜமாத் நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பள்ளிவாசல் அருகில் உள்ள அர் ரஹ்மத் மெட்ரிக்குலேஷன் பள்ளி கட்டுமான பணிக்காக மஜக மாநில பொருளாளரிடம் கோரிக்கை வைத்தனர். அர்ரஹ்மத் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு சென்ற மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் பள்ளி கட்டித்தை பார்வையிட்டு கட்டுமானபணிக்காக உதவிசெய்வதாக கூறினார். இச்சந்திப்பில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஷாஜகான், அன்வர்தீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கடலூர் வடக்கு மாவட்டம். 26.08.17
தமிழகம்
தமிழகம்
மஜக குடியாத்தம் நகர ஆலோசனை கூட்டம்…
வேலூர்.மே.26., குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் MBS- நகரில் நகர செயலாளர் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் SMD.நவாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.Y.ஆரிப் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டர். குடியாத்தம் நகரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளைகள் பலப்படுத்துவதும், அதிக உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ளவும், இரு இடங்களில் கொடியேற்றவும், நகர மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அதனை சீர் செய்ய வேண்டும் என்றும், குடியாத்தம் நகரத்தில் மஜகவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடந்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஜினத் T.ஜாபர் என்பவர் தன்னை மஜகவில் இணைத்துக் கொண்டார். சென்ற வாரம் மிகச் சிறப்பாக நடைபெற்ற மருத்துவ முகாமில், சிறப்பாக பணிகளை மேற்கொண்ட நகர மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு குடியாத்தம் நகரம் சார்பாக நன்றியைத் தெரிவித்தனர். இதில் மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் S.M.நிஜாம்முத்தீன், நகர பொருளாளர் V.முபாரக் அஹ்மத், நகர துணை செயலாளர் N.சலிம், நகர இளைஞர் அணி செயலாளர் முஹம்மத் கெளவுஸ், நகர இளைஞர் அணி துணை செயலாளர் M.பாலாஜி, கிளை செயலாளர் N.அல்தாப், கிளை நிர்வாகிகள் ரஹ்மான், சித்திக், சாதிக், முபாரக், ஷபிக்,
ஓமந்தூரார் மாளிகை முற்றுகை…! மாணவர் இந்தியா அழைக்கிறது..!!
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதை கண்டித்து ஓமந்தூரார் மாளிகை முன் மாணவர் இந்தியா சார்பில் மாணவர்கள் முற்றுகை. இடம் : ஓமந்தூரார் மாளிகை, சிம்சன் பேருந்து நிறுத்தம், மௌன்ட் ரோடு நாள் : 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு இறைவன் நாடினால் தமிழக மாணவர்களின் உரிமையை மீட்க மாணவச்செல்வங்களே அணிதிரள்வீர்.. தொடர்புக்கு ; 9940311477, 9943636483, 9840351764, 8608571139
மஜக கோவை தெற்குபகுதி செயற்குழு கூட்டம்!
கோவை.ஆக.26., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கோவை தெற்கு பகுதியின் செயற்குழு கூட்டம் பகுதி செயலாளர் காஜா உசேன் தலைமையில் நேற்று மாலை பகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பகுதி நிர்வாகிகள் நிவாஸ், யூசுப், ஜக்கிரியா, சிராஜ், ரஹ்மத்துல்லா, ஜாபர் அலி, அபு, மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன... 1. தெற்கு பகுதிக்குட்பட்ட அனைத்து கிளைகளுக்கும் பகுதி நிர்வாகிகள் தலைமையில் கண்காணிப்பாளர்கள் நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது, 2. தெற்கு பகுதியில் விரைவில் கொடியேற்று விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது, 3. கட்சியின் வளர்ச்சி பணிகளை தீவிரமாக முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆகிய மூன்று தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 25.08.17
குடியாத்தம் ஒன்றிய மஜக நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் உடன் வேலூர் மே மாவட்ட துணை செயலாளர் சந்திப்பு….
வேலூர்.ஆக.25., குடியாத்தம் ஒன்றிய காத்தாடி குப்பம் காயிதே மில்லத் நகர் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மஜகவின் வேலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் SMD.நவாஸ் கலந்து கொண்டார். காயிதே மில்லத் நகர் பிரச்சினைகள் சம்பந்தமாக பள்ளிவாசல் சுற்றியுள்ள பகுதிகளில் பார்வையிட்டனர். உடன் ஜமாத்தார்கள், ஊர் பொதுமக்கள், மஜக ஒன்றிய செயலாளர் Y.இம்தியாஸ், நகர செயலாளர் S.அனீஸ், ஒன்றிய பொருளாளர் அமீன், ஒன்றிய துணை செயலாளர் அம்ஜத், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் இம்ரான், நகர துணை செயலாளர் N.சலீம் மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING குடியாத்தம் நகரம் வேலூர் (மே)மாவட்டம். 25.08.17