(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இரங்கல் செய்தி)
விடுதலை போராட்ட வீரர், சமய நல்லிணக்கவாதி, பத்திரிக்கையாளர் என்று வலம் வந்த குல்தீப் நய்யார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது.
தேசப்ப்பிரிவினையின் போது காந்தியடிகளின் வழிநின்று வரலாற்று காயங்களுக்கு மயிலிறகால் மருந்து தடவிய மாமனிதர் அவர்!
நெருக்கடி நிலையை நாடு சந்தித்த போது , ஜனநாயகம் காக்க , மற்றொரு சுதந்திரப் போரை நடத்தியவரில் அவரும் ஒருவர்.
எந்த நிலையிலும் மதச்சார்பின்மை, சமூகநீதி, போன்ற தத்துவங்கள் பலமிழக்க கூடாது என்று கருதியவர்.
மாநிலங்களவை உறுப்பினராக அவர் பணியாற்றியப்போது அவர் முன் வைத்த கருத்துகள் ஜனநாயக்கத்திற்கு அழகு சேர்ப்பவையாகும்.
அவரது கட்டுரைகள் யாவும் “அரசியல் அறிவியலில் ” இடம் பெறத் தகுதியானவை.
இன்று இந்தியா, வகுப்பு வாதிகளின் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள காலக்கட்டத்தில், அவரின் இழப்பு இந்திய ஜனநாயக்கத்திற்கு ஏற்பட்ட இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அனைவரின் துயரத்திலும் மஜக பங்கேற்கிறது .
அத்துடன் , அவரை சார்ந்தவர்களுக்கும், அவரது ஆதரவு கொள்கை வாதிகளுக்கும் எமது ஆழமான ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச் செயலாளர்
#மனிதநேய ஜனநாயக கட்சி
25.08.2018