நெய்வேலி மஸ்ஜித் ரஹமத் பள்ளிவாசலில் மஜக மாநில பொருளாளருக்கு உற்சாக வரவேற்ப்பு.!

image

image

கடலூர்.ஆக.27., நெய்வேலியில் நேற்று முன்தினம் 25/08/17 வெள்ளியன்று பல்வேரு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள்.

ஜூம்மா தொழுகைக்காக நெய்வேலி மஸ்ஜித் ரஹ்மத் பள்ளிவாசலுக்கு சென்றார் இதை அறிந்த பள்ளி நிர்வாகிகள் தொழுகை முடிந்தவுடன் பள்ளியில் மஜக பொருளாளரை வரவேற்று சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

பிறகு ஜமாத்தலைவர் ஹாஜி S.M.அபுபக்கர் அவர்கள் தலைமையில் ஜமாத் நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பள்ளிவாசல் அருகில் உள்ள அர் ரஹ்மத் மெட்ரிக்குலேஷன் பள்ளி கட்டுமான பணிக்காக மஜக மாநில பொருளாளரிடம் கோரிக்கை வைத்தனர்.

அர்ரஹ்மத் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு சென்ற மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் பள்ளி கட்டித்தை பார்வையிட்டு  கட்டுமானபணிக்காக உதவிசெய்வதாக கூறினார்.

இச்சந்திப்பில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஷாஜகான், அன்வர்தீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிள் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
கடலூர் வடக்கு மாவட்டம்.
26.08.17