மஜக குடியாத்தம் நகர ஆலோசனை கூட்டம்…

image

image

image

வேலூர்.மே.26., குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் MBS- நகரில் நகர செயலாளர் தலைமையில்
நேற்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் SMD.நவாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.Y.ஆரிப் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டர்.

குடியாத்தம் நகரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளைகள் பலப்படுத்துவதும், அதிக உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ளவும், இரு இடங்களில் கொடியேற்றவும்,
நகர மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அதனை சீர் செய்ய வேண்டும் என்றும், குடியாத்தம் நகரத்தில் மஜகவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடந்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஜினத் T.ஜாபர் என்பவர் தன்னை மஜகவில் இணைத்துக் கொண்டார்.

சென்ற வாரம் மிகச் சிறப்பாக நடைபெற்ற மருத்துவ முகாமில், சிறப்பாக பணிகளை மேற்கொண்ட நகர மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு குடியாத்தம் நகரம் சார்பாக நன்றியைத் தெரிவித்தனர்.

இதில் மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் S.M.நிஜாம்முத்தீன்,
நகர பொருளாளர் V.முபாரக் அஹ்மத், நகர துணை செயலாளர் N.சலிம், நகர இளைஞர் அணி செயலாளர் முஹம்மத் கெளவுஸ்,
நகர இளைஞர் அணி துணை செயலாளர் M.பாலாஜி, கிளை செயலாளர் N.அல்தாப், கிளை நிர்வாகிகள் ரஹ்மான், சித்திக், சாதிக், முபாரக், ஷபிக், சிப்பத்துல்லா ஆகியோர் கலந்த கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
குடியாத்தம் நகரம்
வேலூர் (மே)மாவட்டம்.
26.08.17