புதுகை.செப்.17., புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியம் முத்துக்குடாவில் கடந்த இரு தினங்கள் முன்பு முஸ்லீம்கள் வாழும் பகுதியில் பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டனர், அப்பகுதிகளை நேற்று இரவு மஜக பொதுச் செயலாளர் #தமிமுன்_அன்சாரி MLA அவர்கள் அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். தகவல் அறிந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் உடனே அப்பகுதிக்கு வருகைதந்தார்கள், அவர்களிடம் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், சட்டம் ஒழுங்களுக்கு பக்கம் விகைவித்த 17போரையும் உடனே கைது செய்யும்படியும், இனி இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இடம் கொடுக்கும் காவல்துறை இன்னும் அப்பகுதியில் கவனம் செலுத்தும்படியும் உயர் அதிகாரிகளிடம் தாம் கூறிக்கொள்கிறேன் எனவும் மஜக பொதுச் செயலாளர் கூறினார்கள். இதில் மஜக மாநில துணை செயலாளர் சேக் அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்டச் செயலாளர் முபாரக் அலி, மாவட்ட பொருளாளர் ஷேக் இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர் ஒலி முகம்மது, அரசை அபுதாஹிர், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் அப்சல்கான், முத்துக்குடா கிளை செயலாளர் சம்சுதீன், அரசனகரி கிளை செயலாளர்
தமிழகம்
தமிழகம்
மஜக சார்பில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக திருச்சியில் ரயில் நிலையம் முற்றுகை…!
திருச்சி.செப்.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் (#மஜக) திருச்சி மாவட்டம் சார்பில் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிராகவும், மத்திய அரசை அகதிகளாக வந்த மக்களை வெளியேற்றாதே என வலியுறுத்தியும் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது. திருச்சி மாவட்ட செயலாளர் #இப்ராம்ஷா தலைமையில், சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இணைப் பொதுச்செயலாளர் #மைதீன்_உலவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், ஜம்.ஜம் பஷீர், ஷேக்தாவூத், மாணவர் இந்தியா அமைப்பாளர் மைதீன் அப்துல் காதர், தொழில் சங்கம் அணி G.K.காதர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் புரோஸ்கான், இளைஞர் அணி சதாம், மற்றும் அரியமங்கலம், ஆழ்வார் தோப்பு, காட்டூர், நத்தர்ஷா தர்கா, காஜாமலை, வரகனேரி கிளை செயலாளர்கள், பொருளாளர்கள், துணை செயலாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோஷமிட்டனர். இதில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்ச்சிமிக்க எதிரிப்பை பதிவு செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருச்சி_மாநகர்_மாவட்டம். 15.09.2017
தோப்புத்துறையில் மியான்மர் அரசின் இனப்படுகொலைக்கு எதிராக மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
நாகை.செப்.15., நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் ரோஹிங்யா முஸ்லிம்களை கொன்று குவிக்கும் மியான்மர் அரசை கண்டித்தும், இந்த விஷயத்தில் ஐநா சபை தலையிட்டு மியான்மர் அரசு மீது கடுமையான தண்டனைகள் விதிக்க வேண்டும், இந்திய அரசு ரோஹிங்யா அகதிகளை அரவணைக்க வேண்டும் என வலியுறுத்தி #மனிதநேய_ஜனநாயக_கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை செயலாளர் சேக் அப்துல்லா அவர்கள் தலைமை வகிக்க நாகை மாவட்ட துணைச் செயலாளர் சேக் மன்சூர், வேதை நகரச் செயலாளர் சேக் அஹமத்துல்லா ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தனர். இதில் மஜக அவைத் தலைவர் மவ்லவி #நாசிர்_உமரி அவர்கள் கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உள்ளூர் ஜமாத்தார்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING வேதை நகரம் (நாகை தெற்கு மாவட்டம்) 15_09_17
ஆனந்தக் கண்ணீர்! உற்சாகம்.! துள்ளல்.!! பேரறிவாளன் வீட்டில் தனியரசு.! தமிமுன் அன்சாரி!
ஜோலார்பேட்டை.செப்.14., பரோலில் வெளிவந்திருக்கும் பேரறிவாளன் வீட்டிற்கு மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA ஆகியோர் வருகை தந்தனர். தென் மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருப்பதால் தற்போது கருணாஸ் MLA அவர்கள் வரமுடியாமல் போயிற்று. ஜோலார்பேட்டைக்குள் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் மஜகவினர் புடைசூழ இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை தந்தனர். வீட்டிற்குள் நுழைந்த இருவரையும் பேரறிவாளன் கண்ணீர் மல்க கட்டிபிடித்துக் கொண்டார். அன்புத்தாய் அற்புதம்மாள் அவர்கள் குதூகலமும் மகிழ்ச்சியும் பொங்க சிரித்த முகத்துடன் வரவேற்று மகனுக்கு பரோல் கிடைத்த நிகழ்வை பரிமாறிக்கொண்டார். அந்த எளிய வீட்டில் பெரியார், பிரபாகரன், திலீபன் ஆகியோரின் புகைப்படங்கள் காட்சியளித்தன. அவர்களின் வீட்டிற்கு தியாகி செங்கொடி இல்லம் என்று இப்போது பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஒரு குழந்தை பிறந்த மகிழ்ச்சியை போல அந்த குடும்பமே கொண்டாட்டத்தோடு வரவேற்று மகிழ்ந்தது. சட்டசபையில் மூன்று கட்சிகளின் சார்பில் நீங்கள் மூவரும் ராஜதந்திர நகர்வுகள் தான் பேரறிவாளனுக்கு பாரோல் கிடைக்க சாத்தியமாயிற்று என்று குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் கூறினர் . பேரறிவாளன் மிகுந்த நெகிழ்ச்சியோடு இருவருடனும் அளவாளவினார். திரும்ப திரும்ப நன்றி கூறினார்.. அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழமான உரையாடல் நடைபெற்றது. அப்போது கிறிஸ்தவ அருட் சகோதரிகள் வருகை
தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கில் மாணவர் இந்தியா..!
வேலூர் செப்.13.,வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள C.அப்துல் ஹக்கிம் பொறியியல் கல்லுரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு CIVIL -O-FEST 2K17 (technical symposium) நேற்று (12.09.2017) நடைபெற்றது. பவுண்டேசன் மார்க்கிங், பேப்பர் பிரசன்டேசன், போஸ்டர் பிரசன்டேசன், பிரிட்ஜ் பேட்டலிங், கூயிஃஜ், ஆடோ கேடு போன்ற பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வேலூர் மற்றும் பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கல்லுரியிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்று பலனடைந்தனர். இக்கருந்தரங்கிற்கு மாணவர் இந்தியா சார்பாக ஸ்பான்சர்ஷிப் செய்யப்பட்டதற்கு C.அப்துல் ஹக்கிம் பொறியியல் கல்லூர் நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. தகவல்; #ஊடகபிரிவு #மாணவர்_இந்தியா 12.09.17