ஜோலார்பேட்டை.செப்.14., பரோலில் வெளிவந்திருக்கும் பேரறிவாளன் வீட்டிற்கு மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA ஆகியோர் வருகை தந்தனர்.
தென் மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருப்பதால் தற்போது கருணாஸ் MLA அவர்கள் வரமுடியாமல் போயிற்று. ஜோலார்பேட்டைக்குள் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் மஜகவினர் புடைசூழ இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை தந்தனர்.
வீட்டிற்குள் நுழைந்த இருவரையும் பேரறிவாளன் கண்ணீர் மல்க கட்டிபிடித்துக் கொண்டார்.
அன்புத்தாய் அற்புதம்மாள் அவர்கள் குதூகலமும் மகிழ்ச்சியும் பொங்க சிரித்த முகத்துடன் வரவேற்று மகனுக்கு பரோல் கிடைத்த நிகழ்வை பரிமாறிக்கொண்டார்.
அந்த எளிய வீட்டில் பெரியார், பிரபாகரன், திலீபன் ஆகியோரின் புகைப்படங்கள் காட்சியளித்தன.
அவர்களின் வீட்டிற்கு தியாகி செங்கொடி இல்லம் என்று இப்போது பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
ஒரு குழந்தை பிறந்த மகிழ்ச்சியை போல அந்த குடும்பமே கொண்டாட்டத்தோடு வரவேற்று மகிழ்ந்தது.
சட்டசபையில் மூன்று கட்சிகளின் சார்பில் நீங்கள் மூவரும் ராஜதந்திர நகர்வுகள் தான் பேரறிவாளனுக்கு பாரோல் கிடைக்க சாத்தியமாயிற்று என்று குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் கூறினர் .
பேரறிவாளன் மிகுந்த நெகிழ்ச்சியோடு இருவருடனும் அளவாளவினார். திரும்ப திரும்ப நன்றி கூறினார்..
அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழமான உரையாடல் நடைபெற்றது.
அப்போது கிறிஸ்தவ அருட் சகோதரிகள் வருகை தந்தனர். அவர்கள் சிறைவாசி குடும்பத்திற்கு சேவை செய்பவர்கள் சந்திப்பு இன்பமாய் மாறியது.
கட்டியணைத்த பேரறிவாளனை பிரியமனமில்லாமல் தனியரசு அவர்களும், தமிமுன் அன்சாரி அவர்களும் புறப்பட்டனர்.
அப்போது அற்புதம்மாள் அவர்கள் ” என் புள்ளைக்கு எப்படியாவது விடுதலை வாங்கி கொடுங்கப்பா” என்றபோது கண்கள் கலங்கினர்.
வெளியே நூற்றுக்கு மேற்பட்ட மஜகவினருடன் பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்.
அவர்களை சந்தித்த இருவரும் எங்கள் அரசியல் பயணத்தில் பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்தது. மகிழ்ச்சியான சம்பவம் என்றனர்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் அரசியல் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து அங்கிருந்து புறப்பட்டார்.
இச்சந்திப்பின் போது மாநில துணை செயலாளர் J.M.வசீம் அக்ரம்.B.sc, மாநில இளைஞர் அணி பொருளாளர் A.மன்சூர் அஹமத், மாவட்ட துணை செயலாளர்கள் SMD.நவாஸ், அக்பர், சையத் ஜாவித்,
வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்பு குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர்,ரபீக் ரப்பானி,மற்றும் வாணியம்பாடி, குடியாத்தம், ஆம்பூர், பேர்ணம்பேட், நகர மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
14_09_2017