மஜக சார்பில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக திருச்சியில் ரயில் நிலையம் முற்றுகை…!

image

image

image

image

திருச்சி.செப்.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் (#மஜக)
திருச்சி மாவட்டம் சார்பில் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிராகவும், மத்திய அரசை அகதிகளாக வந்த மக்களை வெளியேற்றாதே என
வலியுறுத்தியும் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது.

திருச்சி மாவட்ட செயலாளர் #இப்ராம்ஷா தலைமையில்,

சிறப்பு அழைப்பாளராக
மஜக மாநில இணைப் பொதுச்செயலாளர் #மைதீன்_உலவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், ஜம்.ஜம் பஷீர், ஷேக்தாவூத், மாணவர் இந்தியா அமைப்பாளர் மைதீன் அப்துல் காதர், தொழில் சங்கம் அணி G.K.காதர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் புரோஸ்கான், இளைஞர் அணி சதாம்,

மற்றும் அரியமங்கலம், ஆழ்வார் தோப்பு, காட்டூர், நத்தர்ஷா தர்கா,
காஜாமலை, வரகனேரி கிளை செயலாளர்கள், பொருளாளர்கள்,
துணை செயலாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

இதில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்ச்சிமிக்க எதிரிப்பை பதிவு செய்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருச்சி_மாநகர்_மாவட்டம்.
15.09.2017