திருவள்ளூர்.செப்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஆலோயோசனைக் கூட்டம் நேற்று மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் S.M.நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் கலந்துகொண்டார்கள். மேலும் இதில் எதிர்வரும் 22.09.17 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துவரும் இன அழிப்பை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிகப்படியான மக்களை திரட்டி கலந்துகொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜாபர், மாவட்ட துணை செயலாளர் கரிமுல்லாஹ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் நிஜாம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம் 19.09.17
தமிழகம்
தமிழகம்
மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் !!
கோவை.செப்.19.,மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன் மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், இளைஞரணி மாவட்ட செயலாளர் PMA.பைசல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் K.செய்யது இப்ராஹிம், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் A.அபு, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் HM.அனிபா, தொழிற் சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.சம்சுதீன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் AK.முஹம்மது சலீம் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) எதிர்வரும் 24.09.17 அன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அதிகமான மக்களை திரட்டுவது என முடிவுசெய்யப்பட்டது, 2) 20.09.17அன்று மாவட்ட செயற்குழுகூட்டம் நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது, தகவல். #மஜக_தகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 18.09.17
சங்கரன்கோவிலில் மஜகவின் புதிய கிளை உதயம் !
நெல்லை.செப்.18., நெல்லை மேற்கு மாவட்டம் சங்கரன் கோவிலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை மாவட்ட செயலாளர் ஐ.மீரான் அவர்கள் தலைமையில் நேற்று 17-09-2017 அன்று துவங்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் M.செய்யது அலி, மா.து. செயலாளர்கள் நிலா B. சாதிக், பொன்னானி அபுதாகீர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பண்ணையார் இபுராகிம், தென்காசி நகர செயலாளர் நிலா.செய்யது அலி, சிறப்பு அழைப்பாளராக கண்மணி காதர் இராஜபாளையம் நகர செயலாளர் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_மேற்கு_மாவட்டம் 18-09-2017
நாச்சிகுளத்தில் கொலையான சிறுவனின் இல்லத்தில் மஜக பொதுச்செயலாளர் நேரில் ஆறுதல்…!
திருவாரூர்.செப்.18., திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளத்தில் கடந்த 13ஆம் தேதி சக நண்பனால் கொலை செய்யப்பட்ட 14 வயது சிறுவன் முகம்மது மாஜித் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கொலையான மாஜிதின் தந்தை K.P.N. அப்துல் அஜீஸ் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு கொலை நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு சென்று பார்வையிட்டவர் கொலை சம்பவங்களை கேட்டறிந்தார். இக்கொலை சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி உயர் அதிகாரிகளிடம் பேசுவதாக கூறினார். இச்சந்திப்பின் போது மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களும், கிளை நிர்வாகி சாதிக், ராஷித், சமீர் அப்துல் ரஹ்மான், நாச்சிகுளம் ரசீத், முத்துப்பேட்டை நகர செயலாளர் தக்பீர் நெய்ணா முகம்மது மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மைநூர்தீன் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாச்சிகுளம் 18/09/2017
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்! தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சிக்கு எதிரான ஜனநாயக படுகொலை! மஜக கடும் கண்டனம்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை) அதிமுக இரண்டு அணியாக செயல்படும் நிலையில்,TTV தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஆகஸ்ட் 23 அன்று பாஜக தலைவர் ஒருவர் ,இதுபோல தான் நடவடிக்கை வரும்"என்று சொல்லியிருந்தார்.அதன்படியே சபாநாயகர் செயல்பட்டிருப்பது, இதன் பின்னணி என்ன என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இவ் விஷயத்தில் டெல்லி அரசியல் முதலாளிகளின் கண் அசைவிற்கு ஏற்ப ஒரு நாடகம் அரங்கேறியிருக்கிறது. அந்த 18 MLA க்களும் வேறு கட்சிகளுக்கு செல்லவில்லை, அதிமுகவின் உட்கட்சி மோதல்களில் அடிப்படையிலேயே முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக செயல்பட்டார்கள். இதில் சபாநாயகர் பொறுமை காத்திருக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த செப்_20 வரை நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இவ்வளவு அவசரமாக ஒரு முடிவை அறிவித்திருப்பது. #ஜனநாயக_படுகொலையாகும். மத்திய அரசையும், ஆளுனரையும் துணைக்கு வைத்துக்கொண்டு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது நிச்சயமாக நீதிமன்றம் மூலம் இந்த அநீதிக்கு எதிராக நீதி கிடைக்கும் என நம்புகிறோம். #கூடா_நட்பு_கேடாய்_முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை தமிழக முதல்வருக்கும்,தமிழக அமைச்சர்களுக்கும் இத்தருணத்தில் நினைவூட்டுகிறோம். இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 18_09_17