
திருப்பூர்.நவ.12., இன்று மனிதநேய ஜநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் இக்பால் அவர்கள் முன்னிலை வகிக்க,
மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹமது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் டிசம்பர்-6 இரயில் மறியல் போராட்டம் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
சீரிய திட்டத்தோடு சிறப்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில்
தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் காதர்கான், மாவட்ட துணைச் செயலாளர் அக்பர் அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபில் ரிஸ்வான், திருப்பூர் மீரான், செரங்காடு செளகத் அலி, பெரிய தோட்டம் அபு, அஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில்
மாவட்ட துணைச்செயலாளர்
அப்பாஸ் அவர்கள் நன்றியுரைக்கு பின்பு கூட்டம் நிறைவுபெற்றது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாநகர்_மாவட்டம்.
12/11/2017.