மதுக்கூரில் மனித உரிமை மீறல்களை நிறுத்துக..! காவல் துறையினரிடம் மஜக பொதுச்செயலாளர் வேண்டுகோள்..!!

image

image

image

image

தஞ்சை.நவம்பர்.12., தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் கடந்த 30/10/2017 அன்று இஸ்லாமிய ஜனநாயக முன்னனியின் நிறுவனர் மதுக்கூர் மைதீன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அது குறித்து கொலையாளிகள் தரப்பில் காவல் துறையினர் குற்றவாளிகள் 10 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் மதுக்கூர் மைதீன் அவர்களுடன்  இணைந்து
செயல்பட்டார்கள் என்ற காரணம் காட்டி ஏராளமானோர் மீது பொய் வழக்கு போடுவதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களை தொந்தரவு செய்வதாகவும், பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

குறிப்பாக மதுக்கூர் காவல் நிலையத்தில் உளவு துறையில் பணியாற்றும் ரவி என்பவர்
உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு இயக்கத்தை  சேர்ந்தவர்களை கேவலமாக பேசுவதாகவும் இதனால் மதுக்கூரில் பதற்றமான நிலை  ஏற்பட்டுள்ளதாகவும் மஜக நிர்வாகிகளிடம் ஊர் மக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடும் காவல்துறையினரை    கண்டித்து மதுக்கூர் மைதீன் தாயார் காவல் நிலையம் எதிரே தீக்குளிக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே மஜக துணை பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா அவர்கள் அழைத்ததின் பேரில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன் மாநில செயலாளர் நச்சிக்குளம் தாஜுதீன் அவர்களும் மதுக்கூர் சென்றனர்.

சம்பவ இடத்திற்க்கு வந்த பொதுச்செயலாளர் அவர்களிடம்
இந்து, முஸ்லீம் சமுதாயங்களை சேர்ந்த பெண்களும், இளைஞர்களும் திரண்டு வந்து காவல்துறையினரின் அராஜகங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் புகார் அளித்தனர்.

உடனடியாக DSP செங்கமலக் கண்ணன் அவர்களை சந்தித்து மதுக்கூர் மக்கள் தெடர்ந்து அநீதீ  இழைக்கப்படுவதைபடுவதையும்
உளவுத்துறை அதிகாரி ரவி பொய் வழக்கு போடுவேன் எனக்கூறி பணம் கேட்டு மிரட்டுவதையும்  DSPயிடம்  பொதுச்செயலாளர் அவர்கள்  எடுத்துக்கூறினார்.

இந்த விஷயத்தில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்றால் மேலும் இது குறித்து IG_யின் கவனத்துக்கும். தேவைப்பட்டால் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்வோம் என்று கூறினார்.

மதுக்கூரில் போலீசார் மனித உரிமை மீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கண்டிப்புடன் கூறிவிட்டு, மக்களை அமைதிகாக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

#தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்.
12/11/2017