பேராவூரணியில் மஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் மஜக பொதுச்செயலாளர்..! புதிதாக இணைந்தவர்களால் கலை கட்டுகிறது தஞ்சை தெற்கு..!!

image

image

image

image

image

தஞ்சை.நவ.12., தஞ்சை மாவட்டம் நிர்வாக ரீதியாக தஞ்சை வடக்கு, தெற்கு, மாநகர் என நிர்வாக ரீதியாக மூன்றாக பிரிக்கப்ட்டுள்ளது.

மமக உள்ளிட்ட பல்வேறு கட்சியிலிருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் மணவர்கள் இணைந்துள்ள நிவையில், இன்று 12/11/17 பேராவூரணியில் ம.ஜ.க அலுவலகத்தை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார்.

‌ECR சாலை சேதுபவாசத்திரத்திலிருந்து பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்ஜுதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஆகியோரை ஏராளமான கார், பைக்களில் பேராவூரணி வரை ஊர்வலகமாக அழைத்து வந்தனர்.

இந்நிகழ்வுக்கு மாவட்ட பொதுக்குழு தலைவர் பேராவூரணி அப்துல் சலாம் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய தமிழக மக்கள் புரட்சி கழகம் கொள்கை பரப்புச் செயலாளர்  R.நீலகண்டன் பேசும்போது, சிறுபான்மையினர் அல்லது தலித்துகள் கட்சி தொடங்கினால் அவர்களது சமுதாயக் கட்சி என்கிறார்கள், மற்றவர்கள் ஆரம்பித்தால் அது பொதுவான கட்சி என்கிறார்கள். ஆனால் மனிதநேய ஜனநாயக கட்சி அனைத்து சமுதாயத்தவர்களையும் ஜனநாயகம் காக்கும் வகையில் இணைத்திருப்பதால், மஜகவை அப்படி யாராலும் கூறமுடியவில்லை.

தமிழ் தேசியம், திராவிடம், தமிழ்நாட்டின் வாழ்வதாரம் ஆகியற்றிக்காக மஜக பொதுச்செயலாளர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என பாராட்டினர்.

அடுத்து வாழ்த்துரை வழங்கிய திராவிடர் விடுதலை கழக மாவட்ட நிர்வாகி சித.திருவேங்கடம் பேசும்போது, பெரியார் இயக்கங்களும், சிறுபான்மை இயக்கங்களும் எப்போதுமே தோழமையாக செய்ல்பட்டு வருகிறோம். இப்போது சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

அடுத்து பேசிய மெய்சுடர் பத்திரிக்கை ஆசிரியர் வெங்கடேசன் மனு நீதியா? சமூக நீதியா? என்ற போராட்டம் இப்போது  வெடித்திருக்கிறது. தமிழ்நாடு திருமூலர் காலத்திலிருந்தே, சமூக நீதிக்காக இயங்கி வருகிறது. அதுபோல சமூக நல்லிணக்கமும் தமிழ்நாட்டிலிருந்தே கட்டிக் காக்கப்படுகிறது என்றார்.

இறுதியாக மாணவர் இந்தியா நகர் செயலாளர் S.அஸாருதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.

இதில் தஞ்சை தெற்கு, புதுக்கோட்டை மேற்கு, புதுக்கோட்டை கிழக்கு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்