18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்! தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சிக்கு எதிரான ஜனநாயக படுகொலை! மஜக கடும் கண்டனம்!

image

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை)

அதிமுக இரண்டு அணியாக செயல்படும் நிலையில்,TTV தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 23 அன்று பாஜக தலைவர் ஒருவர் ,இதுபோல தான் நடவடிக்கை வரும்”என்று சொல்லியிருந்தார்.அதன்படியே சபாநாயகர் செயல்பட்டிருப்பது, இதன் பின்னணி என்ன என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

இவ் விஷயத்தில் டெல்லி அரசியல் முதலாளிகளின் கண் அசைவிற்கு ஏற்ப ஒரு நாடகம் அரங்கேறியிருக்கிறது.

அந்த 18 MLA க்களும் வேறு கட்சிகளுக்கு செல்லவில்லை, அதிமுகவின் உட்கட்சி மோதல்களில் அடிப்படையிலேயே முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக செயல்பட்டார்கள்.

இதில் சபாநாயகர் பொறுமை காத்திருக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த செப்_20 வரை நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இவ்வளவு அவசரமாக ஒரு முடிவை அறிவித்திருப்பது. #ஜனநாயக_படுகொலையாகும்.

மத்திய அரசையும், ஆளுனரையும் துணைக்கு வைத்துக்கொண்டு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது நிச்சயமாக நீதிமன்றம் மூலம் இந்த அநீதிக்கு எதிராக நீதி கிடைக்கும் என நம்புகிறோம்.

#கூடா_நட்பு_கேடாய்_முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை தமிழக முதல்வருக்கும்,தமிழக அமைச்சர்களுக்கும் இத்தருணத்தில் நினைவூட்டுகிறோம்.

இவண்

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
18_09_17