
கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும், நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும், அணி நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய கிளைகளை உருவாக்குவது குறித்தும், உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும், புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்தும், உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்வது குறித்தும், விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், IKP மாவட்ட செயலாளர் ஹனீபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, மாவட்ட பொருளாளர் பைசல், மாவட்ட துணை செயலாளர்கள் சதாம், செய்யது இப்ராஹிம், அபுதாஹீர், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஷாஜகான், மாவட்ட பொருளாளர் ரியாசுதீன், மாவட்ட துணை செயலாளர் பயாஸ், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாரூண், நெளபல் பாபு, மாவட்ட துணை செயலாளர் ஹக்கீம், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
21.11.2021