நாகை. ஏப்.25., காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி தமிழக காவிரி விவசாய சங்கத்தின் சார்பில் தோழர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் இரு சக்கர வாகன பேரணி வட மாவட்டம் முழுக்க புறப்பட்டுருக்கிறது. இதன் தொடக்க விழா நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெற்றது. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பச்சை கொடியை அசைத்து இரு சக்கர வாகனப் பேரணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் (திமுக), ஆர்.சந்திரமோகன் (அமமுக), நாச்சிக்குளம் தாஜுத்தின்(மஜக) சங்கர வடிவேலு(காங்கிரஸ்), நாகை முபாரக் (மஜக விவசாயணி) மற்றும் வணிகர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். வேதை நகர மஜக செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ், முன்னாள் மாவட்ட து.செயலாளர் ஷேக் மன்சூர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_வேதை_நகரம் 25.04.2018
தமிழகம்
தமிழகம்
மஜக இளைஞரணி மாநில நிர்வாகக்குழு கூட்டத்தின் செயல் திட்டங்களும் தீர்மானங்களும்..!
சென்னை.ஏப்.25., #மனிதநேய_ஜனநாயக_கட்சி தலைமையகத்தில் மாநில #இளைஞரணி நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப்பொதுச்செயலாளர் மண்டலம் S.M. ஜைனுல்லாபுதீன் மற்றும் மாநிலச்செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இளைஞரணி மாநில செயலாளர் S.G.அப்சர் சையத், மாநில பொருளாளர் A.மன்சூர் அஹ்மத், மாநில துணைச்செயலாளர்கள் தாம்பரம் தாரிக் மற்றும் N. அன்வர் பாஷா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிர்வாகக் குழு கூட்டத்தில் வருங்காலத்தில் செய்ய வேண்டிய செயல் திட்டங்களும், தீர்மானங்களும் கிழ்கண்டவாறு நிறைவேற்றப்பட்டது. #செயல்_திட்டங்கள்:- 1. இளைஞர் அணி சார்பாக பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களை ஒருங்கிணைத்து அரசியல் கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் நடத்துதல். 2.சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இளைஞர் அணிக்கு புதிய உறுப்பினர் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல். 3. அனைத்து மாவட்ட வாரியாக இளைஞரணி நிர்வாகிகளை மிக விரைவாக நியமித்தல். 4.மாதத்திற்கு ஒரு முறை இளைஞர் அணி நிர்வாக ஆலோசனை கூட்டம் நடத்துதல். 5. மிக விரைவில் இளைஞரணி மாநில செயற்குழு நடத்துதல். 6. நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க , பசுமையான மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க மஜக இளைஞர் அணி சார்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மரக்கன்று நடுதல். 7. இளைஞர்கள் மத்தியில்
மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக SDPI ஆர்ப்பாட்டம்..! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!!
நாகை. ஏப்.24.,இன்று நாகூரில் மார்க் துறைமுகத்திற்க்கு எதிராக SDPI கட்சி நடத்திய நிலக்கரி தடை கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மஜக சார்பாக நாகூர் நகர செயலாளர் H.ஷேக் இஸ்மாயில் தலைமையில், நகர பொருளார் முஹம்மது இபுராஹிம், முன்னாள் செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, தம்மாம் மண்டலம் முன்னால் துணை செயலாளர் H,ஜாகிர் உசேன், முஹம்மது மஸ்தான், சதாம் உசேன், IKP கலிமுல்லாஹ், செல்லாப்பா, செய்யது இபுராஹிம், நூர்சாதிக், செய்யது மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_தெற்கு_மாவட்டம் 24.04.2018
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்…
மோடிக்கெதிராக கருப்புக்கொடி காட்டிய போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மஜக பொருளாளர் ஹாருன் ரசீது, மஜக நிர்வாகிகள் புதுப்பேட்டை யூசுப், பல்லாவரம் அப்துல்லா, பல்லாவரம் அப்துல் சமது, தாம்பரம் சலீம், அஜ்மல் கான், ஷேக் கஜினி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த 19 பேருக்கும் செங்கல்பட்டு செஷன்ஸ் கோர்ட்டில் பெயில் கிடைத்திருக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே. அனைவரும் அநேகமாக இன்று மாலை விடுதலை செய்யபடுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. எமக்காக குரல் கொடுத்த அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், காவிரி போராட்ட தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். பொருளாளர் ஹாரூன் ரசீது உள்ளிட்ட மஜகவினர் ஏழு பேரையும் வரவேற்க, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ஏ.எஸ் அலாவுதீன் தலைமையில் வரவேற்பு குழு அமைப்பட்டுள்ளது. (தொடர்புக்கு : 04443514550) தொடர்புக்கு: எமது காவிரி உரிமை போராட்டம் சமரசமின்றி தொடரும்... இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி, 24/04/2018.
பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்..! தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA வேண்டுகோள்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எஸ்.கருணாஸ் MLA, ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை..) பாஜக பிரமுகர்களான H.ராஜா அவர்களும், S.V சேகர் அவர்களும் சமீபத்தில் பெண்கள் குறித்து வெளியிட்ட கருத்துகள் நேர்மையான அரசியலுக்கும், நாகரீக பொதுவாழ்வுக்கும் எதிரானதாகும். பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் சமூகமே, நாகரீக சமூகமாகும். பெண்களை தரக்குறைவாக விமர்சிக்கும் நபர்கள் இத்தகைய பட்டியலில் இடம் பெற முடியாது. S.V.சேகர் அவர்கள் வேறு ஒருவருடைய கருத்தை, கவனக்குறைவாக பகிர்ந்ததாக கூறியதை ஏற்காத, பத்திரிக்கையாளர்கள் அவர் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதில் சிலர் கோபத்தில் கல்வீச்சில் ஈடுபட்டது ஏற்புடைய செயல் அல்ல, அதே நேரம் H. ராஜா அவர்களையும், S.Vசேகர் அவர்களையும் கைது செய்ய தயங்கும் காவல்துறை, S.V சேகர் வீட்டின் மீது கல்வீச்சு நடத்திய பத்திரிக்கையாளர்களை மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய துடிப்பதன் பிண்ணனி என்ன? என்பதை அறிய விரும்புகிறோம். டெல்லியிலிருந்து, தமிழகத்தில் செயல்படும் ஊடகளுக்கும், அதன் ஆசிரியர்களுக்கும் திட்டமிட்டு கொடுக்கப்படும் நெருக்கடிகளை தமிழகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு, இவ்விஷயத்தில்