சென்னை.ஏப்.25., #மனிதநேய_ஜனநாயக_கட்சி தலைமையகத்தில் மாநில #இளைஞரணி நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப்பொதுச்செயலாளர் மண்டலம் S.M. ஜைனுல்லாபுதீன் மற்றும் மாநிலச்செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் இளைஞரணி மாநில செயலாளர் S.G.அப்சர் சையத், மாநில பொருளாளர் A.மன்சூர் அஹ்மத், மாநில துணைச்செயலாளர்கள் தாம்பரம் தாரிக் மற்றும் N. அன்வர் பாஷா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிர்வாகக் குழு கூட்டத்தில் வருங்காலத்தில் செய்ய வேண்டிய செயல் திட்டங்களும், தீர்மானங்களும் கிழ்கண்டவாறு நிறைவேற்றப்பட்டது.
#செயல்_திட்டங்கள்:-
1. இளைஞர் அணி சார்பாக பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களை ஒருங்கிணைத்து அரசியல் கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் நடத்துதல்.
2.சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இளைஞர் அணிக்கு புதிய உறுப்பினர் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல்.
3. அனைத்து மாவட்ட வாரியாக இளைஞரணி நிர்வாகிகளை மிக விரைவாக நியமித்தல்.
4.மாதத்திற்கு ஒரு முறை இளைஞர் அணி நிர்வாக ஆலோசனை கூட்டம் நடத்துதல்.
5. மிக விரைவில் இளைஞரணி மாநில செயற்குழு நடத்துதல்.
6. நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க , பசுமையான மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க மஜக இளைஞர் அணி சார்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மரக்கன்று நடுதல்.
7. இளைஞர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல்,
#தீர்மானங்கள்:
1. மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
2. காவிரி மேலாண்மை அமைக்க வேண்டி அறவழியில் போராடிய மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்ற மஜக நிர்வாகிகள் மீது புனையப்பட்ட பொய் வழக்கை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
3. மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன், ஒ.என்.ஜி.சி, ஸ்டெர்லைட், நியூட்ரினோ போன்ற திட்டங்கள் மக்களுக்கு தீங்கு விளைவிக்ககூடிய திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தின் மீது திணிக்கப்படுவதை உடனடியாக கைவிட வேண்டும்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை.
23.04.18