(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எஸ்.கருணாஸ் MLA, ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை..)
பாஜக பிரமுகர்களான H.ராஜா அவர்களும், S.V சேகர் அவர்களும் சமீபத்தில் பெண்கள் குறித்து வெளியிட்ட கருத்துகள் நேர்மையான அரசியலுக்கும், நாகரீக பொதுவாழ்வுக்கும் எதிரானதாகும்.
பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் சமூகமே, நாகரீக சமூகமாகும். பெண்களை தரக்குறைவாக விமர்சிக்கும் நபர்கள் இத்தகைய பட்டியலில் இடம் பெற முடியாது.
S.V.சேகர் அவர்கள் வேறு ஒருவருடைய கருத்தை, கவனக்குறைவாக பகிர்ந்ததாக கூறியதை ஏற்காத, பத்திரிக்கையாளர்கள் அவர் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதில் சிலர் கோபத்தில் கல்வீச்சில் ஈடுபட்டது ஏற்புடைய செயல் அல்ல,
அதே நேரம் H. ராஜா அவர்களையும், S.Vசேகர் அவர்களையும் கைது செய்ய தயங்கும் காவல்துறை, S.V சேகர் வீட்டின் மீது கல்வீச்சு நடத்திய பத்திரிக்கையாளர்களை மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய துடிப்பதன் பிண்ணனி என்ன? என்பதை அறிய விரும்புகிறோம்.
டெல்லியிலிருந்து, தமிழகத்தில் செயல்படும் ஊடகளுக்கும், அதன் ஆசிரியர்களுக்கும் திட்டமிட்டு கொடுக்கப்படும் நெருக்கடிகளை தமிழகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.
தமிழக அரசு, இவ்விஷயத்தில் வெறுப்பு, விருப்பின்றி நியாயமாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவண் :
#மு_தமிமுன்_அன்சாரி_MLA,
#உ_தனியரசு_MLA,
#எஸ்_கருணாஸ்_MLA,
24/04/2018.