அபுதாபி.நவ.05,. மனிதநேய கலாச்சாரப் பேரவையின் அமீரக செயற்குழு கூட்டம் அபுதாபி பனியாஸ் கேம்பில் நடைபெற்றது. MKP அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். அமீரக பொருளாளர் அதிரை அஸ்ரஃப் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அமைப்பின் எதிர்கால திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் மண்டல செயல்பாடுகள் பற்றியும் மற்றும் தலைமை நிர்வாகிகளை அழைத்து மாநாடு நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிறைவாக அபுதாபி மண்டல செயலாளர் லால்பேட்டை தையுப் அவர்கள் நன்றியுரையாற்றினார். தகவல்: #MKP_ஊடகபிரிவு #ஐக்கிய_அரபு_அமீரகம் 04.11.2017
தமிழகம்
தமிழகம்
பேராவூரணி கிளை நிர்வாகிகள் கூட்டம் !
தஞ்சை.நவ.05., தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த சில தினங்கள் முன்பு துவங்கப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை நிர்வாகிகள் கூட்டம் 04-11-2017 நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.ஏ. சலாம் தலைமையில் நடைபெற்றது. எதிர்வரும் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை பேராவூரணி கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடத்துவது என்றும், அந்நிகழ்விற்கு பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அவர்களையும், துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்களையும் அழைப்பது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் இளைஞர்கள் சிலர் ஒருங்கிணைப்பாளர் சலாம் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப அணி #MJK_IT_WING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 04-11-2017
நாகை சுனாமி குடியிருப்பில் சூழ்ந்த மழை வெள்ளம்..! MLA அவர்களால் உடனே அகற்றும் பணி தொடக்கம்..!!
நாகை. நவ.04., நாகையில் கடந்த 30ந்தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாகை 11வது வார்டு சாய்பாபா கோயிலின் அருகே சுனாமி குடியிருப்பில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. தொடர்ந்து மழையின் காரணமாக சுனாமி குடியிருப்பு மழை வெள்ளத்தால் சூழ்ந்தது. இன்று (04/11/2017) மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே MLA அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலக செயலாளர் சம்பத்குமார், நாகை நகர மஜக செயலாளர் M.சாகுல் ஹமீது, மருத்துவ சேவை அணி நகர செயலாளர் H.செய்யது முபாரக், தொழிற்சங்க அணி நகர துணை செயலாளர் M.அப்துல் காதர், மாணவர் இந்தியா நகர துணை செயலாளர் H.அனாஃப் மற்றும் அதிமுகவை சார்ந்த விஜயக்குமார், சக்கரவர்த்தி ஆகியோர் சுனாமி குடியிருப்பு பகுதிக்கு விறைந்தனர். உடனடியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, பேரிடர் மீட்புப்பணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பேரிடர் குழு சார்ந்த நாகூர் VAO வினோத் குமார் சம்பவ இடத்திற்கு, JCB உடன் வந்து, மழை-வெள்ளம் சார்ந்த இடங்களை
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் மஜக பங்கேற்பு!
சென்னை.நவ.04., சென்னையில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் P.R.பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. நடிகர் கமல்ஹாசன், பேராசிரியர். டாக்டர். S. ஜனகராஜன் ஆகியோர் விவசாயிகளை சந்திக்ககூடிய பிரச்சனைகள் பற்றி விரிவாக பேசினர். இதில் மஜக சார்பாக மாநில செயலாளர் சாதிக் பாட்சா, மாநில துணை செயலாளர் ஷமிம் அகமது, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 04.11.2017
கந்து வட்டி கொடுமையால் மற்றொரு மரணம்..! SPயை சந்தித்தார் மஜக பொருளாளர்..!!
திண்டுக்கல்.நவ.04., திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகம்மது ரபீக் அவர்களின் மனைவி தில்ஷாத் பேகம் என்பவர் மகளிர் சுய உதவி குழுவுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். இந்நிலையில் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு பல நபர்களிடமிருந்து கடன் வாங்கி கொடுத்துள்ளார். கொடுக்கல் வாங்கல் அதிகரித்த நிலையில் கடன் வாங்கிய நபர்களிடமிருந்து வட்டியின் காரணமாக நெருக்கடி அதிகரித்திருக்கிறது. மன உளைச்சல் காரணமாக நேற்று 02/11/2017 காலை 11மணியளவில் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்சென்றனர். பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் தற்கொலை செய்ய காரணமாக இருந்தவர்ளை கைது செய்தால்தான் தில்ஷாத் பேகத்தின் உடலை வாங்குவோம் என்று உறவினர்களும், பொது மக்களும் தர்ணாவில் ஈடுப்பட்டுனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். பிரச்சனையை திசை திருப்ப சில காவல்துறை அதிகாரிகள் முயற்சி செய்வதை மாநில பெருளாளர் அவர்களிடம் தெரியப்படுத்தபட்டது இந்த விஷயம் பொதுமக்களிடையே பரவ மருத்துவமனையில் பதற்றம் அதிகமானது. இந்நிலையில்