You are here

சிறைவாசி அபுதாஹிர் மரணம்… நீதிக்கு இன்னுமா உறக்கம்?

நீண்ட கால ஆயுள் சிறைவாசியான அபுதாஹிர் அவர்கள் தனியார் மருத்துவமனையில் உயர் மருத்துவ சிகிச்சையில் போராடிய நிலையிலேயே இன்று உயிரிழந்திருக்கிறார்.

அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினரின் துயரில் பங்கேற்கிறோம்.

இந்தருணத்தில் தமிழக அரசு, 20 ஆண்டுகளை கடந்த நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலையை இரக்கத்துடன் பரீசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

முதல் கட்டமாக 50 வயதை கடந்த நோயாளி கைதிகளையாவது பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்ய துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இது நீதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவகாரம் ஆகும்.

நீண்ட கால சிறைவாசிகளுக்கான நீதி என்பது இன்னும் உறக்கத்தில் இருப்பதை ஏற்க முடியாது.

மனிதாபிமானம் புதைக்குழிக்குள் மூழ்குவதை அனுமதிக்க கூடாது.

தமிழக அரசு இவ்விஷயத்தில் தாமதமின்றி நல்ல முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
08.02.2023

Top