மஜகவின் நெய்வேலி NLC எதிர்ப்பு போராட்டம்… மக்களை உசுப்பும் விளம்பரங்கள்!

நெய்வேலி அனல் மின் நிறுவன (NLC) விரிவாக்கத்திற்கு 25 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தி நிலக்கரி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இது தனியார்மயம் ஆக்கப்படும் சூழல் இருப்பதாக நாடாளுமன்றத்திலேயே ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.

மக்களை எதிர்காலத்தில் தவிக்க விடக்கூடிய இந்தத் திட்டத்திற்கு எதிராக, மனிதநேய ஜனநாயக கட்சி மாபெரும் முற்றுகை போராட்டத்தை எதிர்வரும் பிப்ரவரி 11, அன்று மதியம் 3 மணிக்கு நடத்தவிருக்கிறது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், இயக்குனர் தங்கர்பச்சான், தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குனர் கெளதமன், மித்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் ஜெயராமன், மக்கள் அதிகாரம் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ராஜ், விசிக மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் தி.சு.திருமார்பன், தமிழ்நாடு இளைஞர் சங்க தலைவர் மதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில செயலாளர் E.N.அறிவழகன், சமூக செயல்பாட்டாளர் கூட்டு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜலில் உள்ளிட்ட பல ஆளுமைகள் பங்கேற்று கண்டன உரையாற்ற உள்ளனர்.

மேலும் இந்தப் போராட்டத்திற்கான பணிகளை மஜக மாநில செயலாளர் நாகை முபாரக் மற்றும் மாநிலத் துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், இளைஞரணி செயலாளர் ஹமீது ஜெகபர், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாக பரப்புரை பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சுற்று வட்டாரப் பகுதி மக்களை பெருந்திரளாக இதில் பங்கேற்க செய்ய பரப்புரை பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.