நாகை சுனாமி குடியிருப்பில் சூழ்ந்த மழை வெள்ளம்..! MLA அவர்களால் உடனே அகற்றும் பணி தொடக்கம்..!!

image

image

image

image

நாகை. நவ.04., நாகையில் கடந்த 30ந்தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாகை 11வது வார்டு சாய்பாபா கோயிலின் அருகே சுனாமி குடியிருப்பில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. தொடர்ந்து மழையின் காரணமாக சுனாமி குடியிருப்பு மழை வெள்ளத்தால் சூழ்ந்தது.

இன்று (04/11/2017) மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே MLA அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலக செயலாளர் சம்பத்குமார், நாகை நகர மஜக செயலாளர் M.சாகுல் ஹமீது, மருத்துவ சேவை அணி நகர
செயலாளர் H.செய்யது முபாரக், தொழிற்சங்க அணி நகர துணை செயலாளர் M.அப்துல் காதர், மாணவர் இந்தியா நகர துணை செயலாளர் H.அனாஃப் மற்றும் அதிமுகவை சார்ந்த விஜயக்குமார், சக்கரவர்த்தி ஆகியோர் சுனாமி குடியிருப்பு பகுதிக்கு விறைந்தனர்.

உடனடியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, பேரிடர் மீட்புப்பணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பேரிடர் குழு சார்ந்த நாகூர் VAO வினோத் குமார் சம்பவ இடத்திற்கு, JCB உடன் வந்து, மழை-வெள்ளம் சார்ந்த இடங்களை அகற்றும் பணிகளை துவக்கினார்.

சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மீனவ சமுதாய மக்கள் அனைவரும், எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க இங்கு வரவில்லை என்றும், நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உடனே எடுத்த இந்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

தகவல் ;
#சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்,
#நாகப்பட்டினம்_தொகுதி.
04/11/2017