திருவண்ணாமலை.மே.23., தூத்துகுடியில் 12க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொன்று குவித்த தமிழக காவல்துறையை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக திருவண்ணாமலையில் நகர பொருளாளர் அம்ஜத்கான் தலைமையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் SL.செய்யது முஸ்தபா, மாவட்ட துனை செயலாளர் இன்தியாஸ் உசேன், நகர செயலாளர் அக்பர், நகர இளைஞர் அணி செயலாளர் தர்வேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் கண்டன கோஷங்கள் முழக்கமிட்டனர். திருவண்ணாமலை, கடம்பை, நகர நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் களந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்து கைதாக்கினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்
தமிழகம்
தமிழகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..!!
திருவண்ணாமலை.மே.23., திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (22/05/2018) #மனிதநேய_ஜனநாயக_கட்சி திருவண்ணாமலை நகர செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி T.S பாலு திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நகர செயல்வீரர்கள் கூட்டத்திற்கும் , இப்தார் நிகழ்ச்சிக்கும் சிறப்பு அழைப்பளாராக மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.com, அவர்கள் கலந்து கொண்டார். மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்களுக்கு வழி நெடுங்கிலும் இளைஞர்கள் வாகண பேரணியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் #ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் 100-வது நாளாக அமைதியாக போராடிய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் , துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12க்கும் மேற்பட்டோர் பலியானதை வருத்ததுடன் கண்டனம் தெரிவித்தார். பின்னர் T. S பாலு திருமண மண்டபத்தில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு நகர செயல்வீரர்கள் கூட்டம் நகர செயலாளர் அக்பர் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலாளர் K.காஜா ஷரிப், மாவட்ட பொருளாளர் S.L.செய்யது முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைச் செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு மஜக கடும் கண்டனம்..!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை..) ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தொடர் போராட்டத்தின் நூறாவது நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதிப் பேரணி சென்ற தூத்துக்குடியிலுள்ள 18 கிராம மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உரிமைக்காக போராடிய பொதுமக்கள் மீது , துப்பாக்கி சூடு நடத்தியது நம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமோ என்கிற அச்சத்தை எழுப்புகின்றது. இக்கொடுஞ் செயலை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். சுற்றுச்சூழலுக்காகவும், மண்ணுரிமைக்காகவும் உணர்வுப்பூர்வமாக போராடிய அம்மக்களின் நியாயத்தை உணரத்தவறியது அரசு இயந்திரங்களின் குற்றமாகும். நம்பிக்கை இழந்த மக்கள் வீதிகளில் அணிதிரள்வது என்பது ஜனநாயத்தின் ஒரு அம்சமாகும் . அதில் சிலர் வரம்புமீறல்களில் ஈடுபடும்போது, அதை இலகுவாக கையாண்டிருந்திருக்க வேண்டும் . அதற்கான வழிமுறைகளும் இருக்கின்றன. ஆனால் காக்கை, குருவிகளை சுடுவதுபோல ஈவு இரக்கமற்ற முறையில் போராட்டகாரர்களை சுட்டுக்கொன்றிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுபோன்ற சம்பவங்கள் இனி அங்கு நிகழாமல் இருக்க , தமிழக அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக
இளைஞர்கள் மாணவர்களை வெகுவாக ஈர்த்த மஜக..!
திருப்பூர். மே.20., திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பி.கே.ஆர் காலணி புஸ்பா நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் தங்களை சேவை அரசியலில் ஈடுபட , மஜக திருப்பூர் மாவட்ட செயலாளர் #இ_ஹைதர்_அலி அவர்கள் முன்னிலையில் தங்களை #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யில் இணைத்துக்கொண்டனர். கல்லூரி மாணவர்கள் அனைவரும் மஜகவின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா அமைப்பில் இணைந்து செயலாற்ற உறுதி பூண்டனர். இந்த நிகழ்வின் போது மஜக மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹ்மது, மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் நெளஃபில் ரிஸ்வான், ஆசீக், பெரியதோட்டம் அபு, ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருப்பூர்_மாவட்டம் 20-05-2018
இளைஞர்களை ஈர்த்த மஜகவின் களப்பணிகள்..! ஈரோடு கிழக்கு மாவட்டத்தில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்..!!
ஈரோடு.மே.20., இன்று ஈரோடு கிழக்கு மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி இளைஞரணியின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் கட்டமாக, 6-வது மற்றும் 7-வது வார்டுகளில் #மஜக முன்னெடுக்கும் களப்பணி பற்றிய குழு பிரச்சாரம் நடைபெற்றது., இரண்டாவது கட்டமாக, உறுப்பினர்கள் சேர்க்கை, முன்றாவது கட்டமாக, 7- வது வார்டில் கொடியேற்று விழா நடைபெற்றது., இந்நிகழ்ச்சியில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களின் சட்டமன்ற பணிகள், மாநில பொருளாளர் மற்றும் ஈரோடு மாவட்ட மஜகவினர் ஆகியோரின் மக்களுக்கான களப்பணிகளின் ஈடுபாடுகள் தங்களுக்கு மிகவும் பிடித்தாகவும், குறிப்பாக காவிரி நீர் விவகாரத்தில் #மஜக-வினரின் தொடர் போரட்டங்கள் மற்றும் மக்களுக்கான சேவை அரசியலில் தங்களுக்கும் அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதால், தாங்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தோம் என்று மிகவும் நெகிழ்வுடன் கூறினார். இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞரணி செயலாளர் R. #திலிப் குமார் முன்னிலையில் வகித்தார், பகுதி இளைஞரணி செயலாளர் #தினகரன் கொடியேற்றினார் . இதில், 6 வது வார்டு இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்னன் மற்றும் பரத், ஜெரோம் , மாத்யூ. ஸ்டீபன், ரமேஷ், குனா, சந்தோஷ், அன்பு செல்வன், ஆகியோர் கலந்து கொன்டனர் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING. #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 20.05.2018