சென்னை,மார்ச்.21., அஇஅதிமுகவின் துணைப் பொது செயலாளரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான திரு.டிடிவி. தினகரன் அவர்களை அதிமுகவின் துணைப் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டதற்கும், ஆர்.கே.நகர் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்கள். இச் சந்திப்பில் மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி.MLA, தலைமையில், பொருளாளர் S.S. ஹாரூன் ரசீது M.com, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M. நாசர், இணைப் பொது செயலாளர் மைதீன் உலவி, மாநில செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜுதீன், NA. தைம்மியா, சாதிக் பாட்ஷா, திருப்புவனம்.ராசுதீன் ஆகியோரும் சந்தித்தனர். இச் சந்திப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் அமைந்ததாக பொது செயலாளர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, தலைமையகம். #MJK _ IT_WING 21.03.2017
தமிழகம்
தமிழகம்
காயல்பட்டினத்தில் சட்டவிரோத கட்டிடத்தை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் துறை அமைச்சரை சந்தித்து மஜக மனு…
தூத்துக்குடி,மார்ச்.20., காயல்பட்டிணம் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடத்தை அகற்ற வலியுறுத்தி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு KC.கருப்பணன் அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்து விளக்கிக்கூறினார். அதனை தொடர்ந்து அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அவருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் N.M.தமிமுல் அன்சாரி, மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் K ராஸிக் முஸம்மில் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING தூத்துக்குடி மாவட்டம். 20.03.2017
காயல்பட்டிணம் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத கட்டிடத்தை அகற்றக்கோரி மஜக MLA விடம் கோரிக்கை மனு…
தூத்துக்குடி, மார்ச்.20., காயல்பட்டிணம் கடற்கரையில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடத்தை அகற்றக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைமையகத்தில் சந்தித்து பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MA MLA அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அவருடன் மாநில பொருளாளர் S.S ஹாரூன் ரஷிது மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் உடன் இருந்தனர். இம்மனுவை காயல்பட்டணத்தை சார்ந்த தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் N.M தமிமுல் அன்சாரி, மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் K ராஸிக் முஸம்மில் ஆகியோர் காயல்பட்டிணம் நகரத்தின் சார்பாக கோரிக்கை மனுவை வழங்கினார்கள் தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING தூத்துக்குடி மாவட்டம் 20.03.2017
கரம்பக்குடியில் எழுச்சியாக நடந்த மஜகவின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்…
புதுகை. மார்ச்.20., நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கரம்பகுடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் "மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்'' வெகு சிறப்பாக நடைபெற்றது. மஜக புதுக்கோட்டை மாவட்ட துணை செயலாளர் கரம்பக்குடி முகம்மது ஜான் தலைமையில், நகர செயலாளர் S. அமீர் அம்ஷா வரவேற்புரை நிகழ்த்த பொதுக்கூட்டம் துவங்கியது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமுமுக, மமக போன்ற பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகளில் இருந்து பலர் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். மஜக மாநில பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M. நாசர், மாநில செயலாளர் N.A. தைம்மியா, மாநில துணை பொது செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். முன்னிலை தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஏ. எம். ஹாரிஸ், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் துரை முகம்மது, பொருளாளர் ரஹீம் தாலிப்,மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் V. சீனிவாசன், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முபாரக் அலி, பொருளாளர் ஷேக் இஸ்மாயில், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது
வேலூர் (மே) மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியம் கடாம்பூரில் மஜக கிளை உதயம்…
வேலூர்.மார்ச்.20., வேலூர் மேற்கு மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியம், கைலாசகிரி ஊராட்சி கடாம்பூரில் புதிய கிளை உதயம் . பேர்ணாம்பட்டு ஒன்றியம் கடாம்பூரில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர் J.M.வசீம் அக்ரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் சையத் ஜாவித், S.M.D நவாஸ் மற்றும் பேர்ணாம்பட்டு நகர செயலாளர் K.ரசீத் அஹமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடாம்பூர் கதீர் அஹ்மத், சதீஸ், நசீர் ஆகியோர் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர் இதில் கைலாசகரி ஊராட்சியை சார்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர். பின்பு அனைவரயும் மஜகவின் பணிகளை விளக்கி மாவட்ட நிர்வாகிகள் உரை நிகழ்த்தினர். அதன்பின் அனைவரும் ஆர்வமாக தங்களை மஜகவில் இணைந்துக்கொண்டார்கள். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, வேலூர் மேற்கு மாவட்டம். #MJK_IT_WING 19.03.2017