கலைஞர் உடல் நலன்! காவேரி மருத்துவமனைக்கு மஜக தலைவர்கள் வருகை..!!

சென்னை.ஜூலை.28., இன்று சென்னை காவிரி மருத்துவமனைக்கு #கலைஞரின் உடல் நலம் விசாரிக்க #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரஷீது, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் #A_S_அலாவுதீன் , ஆகியோர் வருகை தந்தனர்.

அவர்களுடன் #தனியரசு_MLA, #கருணாஸ்_MLA ஆகியோரும் வருகை தந்தனர்.

#திமுக MLAக்கள் செந்தில், எழில், மூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோரும், T.K.S.இளங்கோவன் அவர்களும் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அங்கு பேராசிரியர் அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் இருந்தனர்.

சந்திப்புக்குப் பிறகு தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து #கலைஞர் நலம் பெற, தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்..

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை