சென்னை,மார்ச்.21., அஇஅதிமுகவின் துணைப் பொது செயலாளரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான திரு.டிடிவி. தினகரன் அவர்களை அதிமுகவின் துணைப் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டதற்கும், ஆர்.கே.நகர் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்கள்.
இச் சந்திப்பில் மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி.MLA, தலைமையில், பொருளாளர் S.S. ஹாரூன் ரசீது M.com, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M. நாசர், இணைப் பொது செயலாளர் மைதீன் உலவி, மாநில செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜுதீன், NA. தைம்மியா, சாதிக் பாட்ஷா, திருப்புவனம்.ராசுதீன் ஆகியோரும் சந்தித்தனர்.
இச் சந்திப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் அமைந்ததாக பொது செயலாளர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
தலைமையகம்.
#MJK _ IT_WING
21.03.2017