மஜக பொள்ளாச்சி நகரம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.

அவர்களுக்கு உதவும் வகையில் கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி பொள்ளாச்சி நகரத்தின் சார்பில் கட்சியில் பணியாற்றக்கூடிய ஏழ்மை நிலையில் உள்ள பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு ரூ.2150 மதிப்புள்ள ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் சுமார் 50பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இதில் பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீசா, நகர பொருளாளர் முகமது பஷீர், நகர துணைச் செயலாளர் அன்சர், நகர இளைஞரணி செயலாளர் அலாவுதீன், பொருளாளர் இஸ்மாயில், துணைச் செயலாளர்கள் சௌகத், அபிப் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
24.04.2020