கொரோனா சிகிச்சை நிலவரம்! அமைச்சர் விஜயபாஸ்கருடன் முதமிமுன் அன்சாரி MLA பேச்சு..!

ஏப்ரல்.25.,

இன்று சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு. திரு. விஜயபாஸ்கர் அவர்களுடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் அலைபேசியில் உரையாடினார்.

தற்போது அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொடர்பில் கிசிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் நலம் குறித்து விசாரித்தார்.

முதலில் “பாசிட்டிவ்” ஆனவர்கள், 14 நாட்களுக்கு பிறகு அடுத்தடுத்து “நெகட்டிவ்” ரிசல்டை பெற்றால், அதிகபட்சமாக 28 நாட்களில் வீடு திரும்புவார்கள் என்றும், அவர்கள் வீட்டில் அடுத்த இரு வாரங்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் விளக்கினார்.

தற்போது உரிய கிசிச்சை காரணமாக விரைவாக பலர் குணமடைந்து வருவதாகவும், சதவீத அடிப்படையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்த முன்னேற்றம் என்றும் கூறினார்.

ஒவ்வொருவரின் நலன் கருதி மிகுந்த ஈடுபாட்டோடு கிசிச்சை அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

அவருக்கு பாராட்டுகளை தெரிவித்த பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள், முழுமையாக கிசிச்சைப் பெற்றவர்கள் விரைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே உறவினர்களின் விருப்பம் என்பதை சுட்டிக்காட்டினார்.

அதை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுக்க கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
25-04-2020