ஏப்ரல்.24.,
நெல்லை மாநகர் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் சஞ்சீவி பார்மா இணைந்து ஊரடங்கிலும் தொடர்ந்து பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சித்த மூலிகை மருந்துகளான கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் சூரணப்பொடிகள் மற்றும் ஆடாதோடா, மனப்பாகு உள்ளிட்ட சஞ்சீவியின் மூலிகை தொகுப்புகளை நெல்லை மாநகர துணை ஆணையாளர் திரு. சரவணன் அவர்களிடம் 400 காவலர்களுக்கு வழங்கும் வகையில் அளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை மஜக-வின் மாநகர செயலாளர் நெல்லை நிஜாம், பொருளாளர் பேட்டை மூஸா, துணைச் செயலாளர்கள் பீர்முஹம்மது, அலாவுதீன் மற்றும் நெல்லை பகுதி செயலாளர் கலீல் உள்ளிட்டோர் செய்தனர்.
தொடர்ந்து சஞ்சீவி பார்மாவின் தென்மண்டல மேலாளர் A. குல்முஹம்மது அவர்கள் கலந்துக் கொண்டு மருந்தின் நன்மைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகரச் செயலாளர் நெல்லை நிஜாம் அவர்கள் கூறும்போது…
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் ஆலோசனையின் பேரில், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அடுத்தக்கட்டமாக மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்வதற்கானப் பணிகள் நடைப்பெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மாநகர்
24-04-2020