நெல்லையில் சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..! மாவட்ட ஆட்சியரிடம் நெல்லை மாவட்ட மஜகவினர் மனு..!

நெல்லை.செப்.06.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் நிஜாமுதீன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. விஷ்ணு அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…

நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், நெல்லை மாநகரத்தில் தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு மவுண்ட் ரோடு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும்,

மேலும் கேரளா மாநிலம் விழிஞ்ஞம் கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் துறைமுக பணிக்கு தேவையான கட்டுமானப் பொருட்களுக்கு தேவைப்படும் பாறைகள், மலைகளை உடைத்து எடுப்பதற்கு கேரள அரசு தடை விதித்துள்ளது. ஆனால் நெல்லை மாவட்டத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கல் குவாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அனுமதித்ததை விட அதிகளவில் கல் குவாரிகளில் சட்டத்துக்கு புறம்பாக அதிகளவிலான பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் கல் குவாரிகளில் ஆய்வு செய்து சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்து இயற்கை வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது செயற்குழு உறுப்பினர் நிலா இக்பால், நிர்வாகிகள் ராபியாஸ் ஷேக், டில்லி சம்சுதீன், எஸ் எஸ்.வி.மைதீன், பத்தமடை கனி மற்றும் ஆதிமூலம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
06.09.2021