மஜக தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக நிவர் புயல் நிவாரண பொருட்கள் சைதாபேட்டையில் விநியோகம்..!


சென்னை.நவ.29.,

நிவர் புயலின் பாதிப்பால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது, இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டு மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக மஜக தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக சைதாப்பேட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு தேவையான போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது..

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் அப்துல் கையூம் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க பகுதி பொருளாளர் அக்பர் அலி, சைதை பகுதி துணைச் செயலாளர் காதர், மீனவ அணி செயலாளர் இஸ்மாயில் மற்றும்171 வட்டப் பொறுப்பாளர் ரபி பாய், ஆட்டோ அமீர் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#CycloneNivar
#மஜக_பேரிடர்_மீட்புகுழு
#களத்தில்_மஜக