சென்னை.நவ.29., நிவர் புயலின் பாதிப்பால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது, இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டு மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக மஜக தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக சைதாப்பேட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு தேவையான போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் அப்துல் கையூம் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க பகுதி பொருளாளர் அக்பர் அலி, சைதை பகுதி துணைச் செயலாளர் காதர், மீனவ அணி செயலாளர் இஸ்மாயில் மற்றும்171 வட்டப் பொறுப்பாளர் ரபி பாய், ஆட்டோ அமீர் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #CycloneNivar #மஜக_பேரிடர்_மீட்புகுழு #களத்தில்_மஜக
நிவர் புயல்
தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது..!
செங்கல்பட்டு.நவ.27., நிவர் புயலால் தாம்பரம் மற்றும் முடிச்சூர் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது, பாதிக்கப்பட்ட இடங்களை இன்று (27-11-2020) மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணை பொது செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாமிற்கு சென்று ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் வழங்கினர். இந்நிகழ்வின் போது மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், MJTS தலைவர் பம்மல் சலீம், மருத்துவ சேவை அணி மாநில துணைச்செயலாளர் அப்துர் ரஹ்மான், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் தாரிக், செங்கை வடக்கு மாவட்ட செயலாளர் ஆலந்தூர் அல்தாஃப், பொருளாளர் சலீம், துணை செயலாளர்கள் தாம்பரம் ஜாகிர், தில்சாத், முகம்மது அஜீஸ் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #CycloneNivar #நிவர்_புயல் #மஜக_பேரிடர்_மீட்புகுழு #களத்தில்_மஜக 27-11-2020
ஆம்பூரில் நிவர்புயல் பாதிப்பு!! பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து மஜக அவைத்தலைவர் நாசர் உமரி ஆறுதல் கூறினார்..!
ஆம்பூர்.நவ 27, நிவர் புயல் தாக்கத்தினால் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஆம்பூர் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததுடன் சில வீடுகளும் இடிந்து விழுந்ததில் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர், பாதிப்புக்குள்ளான அப்பகுதிகளை மனிதநேய ஜனநாயக கட்சியின் அவைத்தலைவர் எஸ்.எஸ்.நாசர் உமரி நேரில் பார்வையிட்டு அம்மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் உரிய நிவாரணம் கிடைக்க அதிகாரிகளிடம் பேசுவதாகவும் அவர்களிடம் தெரிவித்தார். உடன் திருப்பத்தூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் MJTS-யின் மாவட்ட செயலாளர் அப்ரோஸ் மற்றும் மஜகவின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பத்தூர்_மாவட்டம் #CycloneNivar 27-11-2020
மஜக தலைமையகத்தில் காயல்பட்டினம் நண்பர்கள் வாட்ஸ் அப் குழுமம் சார்பாக நிவாரண பொருட்கள் ஒப்படைப்பு.!
நிவர் புயல் காரணமாக சென்னையில் பெய்த கன மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பேரிடர் மீட்பு குழு சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காயல்பட்டினம் நண்பர்கள் வாட்ஸ் அப் குழுமம் சார்பாக 150 குடும்பங்களுக்கு தேவையான சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் மஜக-வின் தலைமை செயற்குழு உறுப்பினர் தமிமுல் அன்சாரி மற்றும் ஆபித் அலி ஆகியோர் வழங்கினர். தகவல் #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #CycloneNivar #நிவர்_புயல் 27.11.2020
நிவர்புயல் : 250 குடும்பங்களை மீட்டு முகாமில் தங்கவைத்த மஜகவினர்
நிவர் புயல் தாக்கத்தினால் வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வேலூர் மாநகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, இந்நிலையில் கொணவட்டம் நகரில் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவர்களுடன் இணைந்து மனிதநேய ஜனநாயக கட்சி பேரிடர் மீட்புக் குழுவினர் மழையால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீட்டு பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கிட உதவி புரிந்ததுடன் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்பாடு செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.. #மஜக_பேரிடர்_மீட்பு_குழு #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் #CycloneNivar