You are here

மண்டபம் மீனவர்களுக்கு உதவுக… 5 மீனவர்களுக்கு இழப்பீடு கேட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மஜக மனு!

ஜுலை:18,

கடல் அட்டை மீன்களை பிடிக்க சட்டப்பூர்வமாக அனுமதிக்க கோரி ராமநாதபுர மாவட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் அதில் பங்கேற்று விட்டு ஊர் திரும்பும்போது , மண்டபத்தை சேர்ந்த 5 மீனவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

அவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதி வழங்க வேண்டும் என அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு, மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இன்று பாதிக்கப்பட்ட மீனவர் குடும்ப பிரதிநிதிகள், மீனவர் நல செயல்பாட்டாளர்களை அழைத்து கொண்டு, ராமநாதபுர மாவட்ட மஜகவினர், மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட மஜக அமைப்புக் குழு தலைவர் நஜீர், அமைப்புக் குழு உறுப்பினர்கள் கீழை செய்யது இப்ராகிம் மற்றும் மைனுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#இராமநாதபுரம்_மாவட்டம்
18.07.2022

Top