You are here

அன்பின் சந்திப்பு சிவத்திரு திருவடிக் குடில் சுவாமிகளுடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு!

ஜூலை 21,

கும்பகோணத்தில் ஜோதிமலை இறைபணி திருக்கூடம் அமைத்து ஆன்மீகம், சமூக சேவை என செயல்படுபவர் சிவத்திரு.திருவடிக் குடில் சுவாமிகள்.

சமூக நல்லிணக்கம், மது ஒழிப்பு பரப்புரை என செயல்படும் இவரது பணிகளை அறிந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், இன்று அவரது குடிலில் அவரை சந்தித்து உரையாடினார்.

அப்போது பிரபல அமெரிக்க எழுத்தாளரான மைக்கேல் H. ஹார்ட் எழுதிய ‘புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர் ‘ என்ற புகழ் பெற்ற நூலை பரிசளித்தார்.

அதுபோல் சுவாமிகள், அவர் உரையாற்றியதன் தொகுப்பான ‘மனித குலத்தின் முன் மாதிரி நபிகள் நாயகம் (ஸல்) ‘ என்ற நூலை பொதுச் செயலாளருக்கு வழங்கினார்.

அனைத்து வித வகுப்புவாதத்திற்கு எதிராக, நல்லிணக்க சிந்தனையாளர்கள் அனைவரும் களமிறங்க வேண்டியதன் அவசியம் குறித்தும், மக்களை ஒற்றுமையை நோக்கி திரட்டுவது குறித்தும் இருவரும் கருத்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.

மஜக-வின் மது ஒழிப்பு கொள்கை குறித்து கேட்டறிந்த சுவாமிகள், அது குறித்த தனது முயற்சிகளையும் கூறினார்.

அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்காக மஜக முன் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதாக கூறி, தனது அன்பையும், வாழ்த்துக்களையும் வெளிப்படுத்தினார்.

இச்சந்திப்பின் போது, மஜக மாநில துணைச் செயலாளர் அகமது கபீர், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஷேக் முகம்மது அப்துல்லா, ஜித்தா மண்டல செயலாளர் மஸ்தான், மாவட்ட துணைச் செயலாளர் இப்ராகிம் ஷா, பாபநாசம் ஒன்றியச் செயலாளர் அஷ்ரப் அலி உடனிருந்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
21.07.2022

Top