ஆம்பூர்.நவ 27,
நிவர் புயல் தாக்கத்தினால் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஆம்பூர் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததுடன் சில வீடுகளும் இடிந்து விழுந்ததில் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர்,
பாதிப்புக்குள்ளான அப்பகுதிகளை மனிதநேய ஜனநாயக கட்சியின் அவைத்தலைவர் எஸ்.எஸ்.நாசர் உமரி நேரில் பார்வையிட்டு அம்மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் உரிய நிவாரணம் கிடைக்க அதிகாரிகளிடம் பேசுவதாகவும் அவர்களிடம் தெரிவித்தார்.
உடன் திருப்பத்தூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் MJTS-யின் மாவட்ட செயலாளர் அப்ரோஸ் மற்றும் மஜகவின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பத்தூர்_மாவட்டம்
#CycloneNivar
27-11-2020