தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது..!


செங்கல்பட்டு.நவ.27.,

நிவர் புயலால் தாம்பரம் மற்றும் முடிச்சூர் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது, பாதிக்கப்பட்ட இடங்களை இன்று (27-11-2020) மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணை பொது செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாமிற்கு சென்று ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் வழங்கினர்.

இந்நிகழ்வின் போது மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், MJTS தலைவர் பம்மல் சலீம், மருத்துவ சேவை அணி மாநில துணைச்செயலாளர் அப்துர் ரஹ்மான், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் தாரிக், செங்கை வடக்கு மாவட்ட செயலாளர் ஆலந்தூர் அல்தாஃப், பொருளாளர் சலீம், துணை செயலாளர்கள் தாம்பரம் ஜாகிர், தில்சாத், முகம்மது அஜீஸ் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#CycloneNivar
#நிவர்_புயல்
#மஜக_பேரிடர்_மீட்புகுழு
#களத்தில்_மஜக
27-11-2020