ஆந்திர எல்லை அருகில் வேலூர் (மே) மாவட்டம் கொள்ளப்பள்ளியில் மஜக கிளை உதயம்…

image

image

வேலூர்.மார்ச்.21., தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைக்கு அருகில் வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம்  ஒன்றியம் கொள்ளப்பள்ளியில்
மஜக புதிய கிளை நேற்று உதயமானது.

நேற்று குடியாத்தம்  ஒன்றியம் கொள்ளப்பள்ளியில் மஜக ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் Y.இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஒன்றிய துணை செயலாளர் முபாரக், ஒன்றிய இளைஞர் அணி  செயலாளர் இஸ்மாயில் குடியாத்தம் நகர பொருளாளர் முபாரக், துணை செயலாளர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணை செயலாளர் S.M.D நவாஸ் மற்றும் மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் SM.நிஜாமுதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாராக கலந்துக்கொண்டு மஜகவின் பணிகள் குறித்து விளக்கினார்கள்,

கொள்ளப்பள்ளி பைரோஸ் பாஷா, அஷ்ரப் அலி நிஜாமுதீன் ஆகியோர் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர் இதில் கொள்ளப்பள்ளியை சார்ந்த இளைஞர்கள் ஆர்வமாக கலந்துக்கொண்டு அனைவரும் தங்களை மஜகவில் இணைந்துக்கொண்டார்கள்.

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
வேலூர் மேற்கு மாவட்டம்.
#MJK_IT_WING
21.03.2017