குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாளை முன்னிட்டு காணொளி கருத்தரங்கம் 20-07-2021 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. துவக்கமாக மண்டல மருத்துவ அணி செயலாளர் சுவாமிமலை ஜாஹிர் உசேன், அவர்கள் நீதிபோதனை நிகழ்த்தி துவக்கி வைத்தார். ஊடகதுறை இணை செயலாளர் திருக்கோவிலூர் சலீம் ஷா, அவர்கள் வரவேற்புரை நிகழ்தினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MA Ex.MLA அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள் அவரது உரையில், தற்போது உள்ள கொரோனா நோய் தொற்றிலிருந்தும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் அனைவரும் தங்களையும், தங்களது குடும்பத்தாரையும் பாதுகாத்து கொள்ளும்படியும், சூழல் விரைந்து சீர்பெற வேண்டி பிரார்த்திக்கும்படி கேட்டு கொண்டார். கொரோனா இரண்டாவது பேரலையில், மஜக வினர் ஆம்புலென்ஸ் சேவைகள்,ஆக்ஸிஜன் சிலிண்டர் வினியோக சேவைகள், நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கல், ஏழை பயனாளிகளை தேடி சென்று உதவுவதல் என உளத்தூய்மை யோடு பணியாற்றி யதை விபரமாக கூறினார். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்ப தாகவும், இந்த அரசு
MKP – மனிதநேய கலாச்சாரப் பேரவை
கத்தார் மண்டல பெருநாள் சந்திப்பு..! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்பு!
மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலம் சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி காணொளி வழியே நடைபெற்றது. கடந்த வெள்ளி மாலை 7.30 மணியளவில் கத்தார் மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசின் தலைமையில் காணொளி (Zoom) மூலம் நடைபெற்ற நிகழ்வில் மண்டலத்தின் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி Ex. MLA அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கீழக்கரை ஹுசைன், உத்தமபாளையம் உவைஸ், மற்றும் மண்டல துணைச் செயலாளர்கள் சிதம்பரம் நூர் முஹம்மது, பரங்கிபேட்டை அப்துல் ரசாக், திருச்சி நஜிர் பாஷா, மேலப்பாளையம் அல் பத்தாஹ், பரங்கி பேட்டை பாருக், மற்றும் மண்டல IT Wing செயலாளர் மேலப்பாளையம் ஜுபைர்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொதுச்செயலாளர் ஈகை திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து, நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். கத்தார் மண்டம் சார்பாக நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். கொரோனா கால கட்டத்தில் நிர்வாகிகளின் பணிகளை பாராட்டினார். அடுத்த கட்ட பணிகளை தொடந்து முன்னெடுக்க அறிவுரை வழங்கினார். முதிர்ச்சியான மஜக வின் அணுகு முறைகளும், முற்போக்கு அரசியலும் மக்களால் வரவேற்கப்படுவது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கினார். பதவிக்காக நமது அரசியல் பயணம் இல்லை என்பதையும்,
திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு.!
மஜக சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் பஹ்ரைன் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் மதிமுக பிரமுகர்கள் மல்லை. சத்யா, தென்றல் நிசார், வல்லம் பஷீர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். பிறகு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்ற திருச்சி மாவட்ட மஜக செயலாளர் பேரா.மைதீன் அவர்களின் வீட்டுக்கு சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பிறகு ஆரிபா குழுமத் தலைவர் சுல்தான் ஆரிபின் அவர்களின் திருச்சி இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து உரையாடினார். பிறகு திருச்சியில் புதிதாக கட்சியில் இணைந்தவர்களுடன் படம் எடுத்து கொண்டார். தொடர்ந்து திருச்சி மாவட்ட மஜக நிர்வாகிகளுடன் கட்சி பணிகள் குறித்து விரிவாக கலந்தாலோசித்தார். அடுத்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கூறிவிட்டு சென்னை புறப்பட்டார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKITWING #திருச்சி_மாவட்டம் 11.07.2021 https://m.facebook.com/story.php?story_fbid=3573712569395159&id=700424783390633
MKP நியமன அறிவிப்பு.!கத்தார் மண்டல துணை செயலாளர்கள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை கத்தார் மண்டல துணை செயலாளர்களாக, 1) பரங்கிபேட்டை பாருக் அலைபேசி; 50526327 2.)மேலப்பாளையம் அல் பத்தாஹ் அலைபேசி; 55943014 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 15-02-2021