அறந்தாங்கி.செப்.09., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினத்தில் வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஒன்றிய செயலாளர் முகம்மது மைதீன் (செல்லஅத்தா) தலைமையில் பெட்ரோலை பாடையேற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) மாவட்ட செயலாளர் சாஜீதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக கோட்டைப்பட்டிணம் ஆட்டோஸ்ட்டான்ட் முதல் செக்போஸ்ட் வரை பெட்ரோலை ஒரு கேனில் பிடித்து அதற்கு #பாடை_கட்டி ஊர்வலமாக எடுத்து வந்தனர், தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பபினார்கள். இதில் மாவட்ட துணை செயலாளர் அரசை அபுதாகிர், மாவட்ட மீனவர் அணி செயலாளர் கோட்டை முஜிபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோட்டை அஜ்மீர், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் அப்துல் கனி, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ரியாஸ் அஹமது, ஒன்றிய பொருளாளர் நாகூர் கனி. ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் செய்யதுஅபுதாகிர், பொருளாளர் முகம்மது குஞ்சாலி, கோட்டைப்பட்டினம் MJTS நகர செயலாளர் அனீஸ், மாணவர் இந்தியா நகர செயலாளர் உமர் ஹத்தாப், நகர மஜக பொருளாளர் முகம்மது ராசிக் மற்றும் அம்மாப்பட்டினம்
MJTS – மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம்
MJTS தலைமையக நியமன அறிவிப்பு..!
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) கரூர் மாவட்ட தலைவராக A.அப்பாஸ் S/o. அமீர் #19/20F. சீ.ஆ.கோ.ரோடு, முதல் கிராஸ், கரூர்-639001 அலைபேசி : 9786639058 நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன் இவண்; #பம்மல்_சலீம் #மாநில_தலைவர் #மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம்_MJTS 08.09.2018
கோட்டைப்பட்டினம் கடற்கரை பகுதியில் வெள்ள நிவாரண நிதி திரட்டிய மஜகவினர்..!!
புதுகை.ஆக.19., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் கேரளா மலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் பணியில் மஜகவினர் கடற்கரை பகுதியில் இறங்கினர். கடற்கரை பகுதியில் தன்னார்வமாக நிதி திரட்டும் பெட்டிகளில் தங்களால் இயன்ற பங்களிப்பினை வாழங்கியவுடன், இந்த தன்னலமற்ற பணியினை வெகுவாக பாராட்டினர். இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொறுப்பாளர் கோட்டை ஹாரிஸ், MJTS மாவட்ட செயலாளர் ஷாஜி தீன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் முஜிபு ரஹ்மான், ஒன்றிய செயலாளர் முகம்மது மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் கான் உட்பட மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர். முதற்கட்டமாக இந்த நிதி திரட்டும் பணியின் மூலம் கோட்டைப்பட்டினம் பகுதியில் மட்டும் ₹34,530 வசூலாகி உள்ளது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம் 19.08.2018
யாரும் வரம்பு மீறக்கூடாது! மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவுரை!
கோவை.ஜுலை.30., கோவையில் நடைபெற்ற #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற #மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கட்சியினருக்கு அறிவுரை வழங்கும் விதமாக பல அரிய கருத்துகளை கூறி பொதுமக்களின் உள்ளங்களை தொட்டிருக்கிறார். அவர் பேசியதாவது ... இன்று (29.07.18) காலை அமைச்சர் இங்கு வரும் போது செண்டு மேளம் அடித்து வரவேற்றது தேவையற்றது. இனி இது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தேர்தல் நேரங்களில் மட்டும் தான் இது போன்ற விஷயங்கள் கூட்டணி கலாச்சாரம் என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது. இதை உணர்ந்து இனி மஜக சொந்தங்கள் செயல்பட வேண்டும். என்னை இளம் காயிதே மில்லத் என அன்பு மிகுதியால் சிலர் சொன்னார்கள். அவரின் புகழ் நிழலில் கூட எங்களால் நெருங்க முடியாது. இது தான் உண்மை. காயிதே மில்லத் தூக்கி ஓடிய ஜோதியை, அப்துல் சமது சாகிபும், பிறகு அப்துல் லத்தீப் சாகிபும் தூக்கி ஓடினார்கள். இப்போது நாங்கள் தூக்கி ஒடுகிறோம். அவர்களது பாடங்களையும் ., செயல்களையும் தான் நாம் பின்பற்றுகிறோம். எனவே எங்களுக்கு புனித பிம்பங்களை போர்த்தாதீர்கள். நாங்கள் சாமானியர்கள். பலம்., பலகீனம், கோபம், சாபம், குறைகள், நிறைகள் கொண்ட சராசரிகள்
புதுகை கிழக்கு மாவட்ட MJTS செயலாளர் இல்ல திருமண விழா..! மஜக பொதுச்செயலாளர் நேரில் வந்து வாழ்த்து..!!
புதுகை.ஜூலை.12., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் தொழிற் சங்கமான #மனிதநேய_ஜனநாயக_தொழிற்_சங்கம் (#MJTS) மாவட்ட செயலாளர் T.ஷாஜி தீன் இல்ல திருமண விழா நேற்று (11.07.2018) மாலை கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் அழைப்பினை ஏற்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். இதனை அடுத்து பல்வேறு இளைஞர்கள் தன்னெழுச்சியாக பொதுச்செயலாளர் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மஜக துணை பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொறுப்பாளர் கோட்டை ஹாரிஸ், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, மணமேல்குடி ஒன்றிய செயலாளர் முகம்மது மைதீன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, கோட்டைப்பட்டினம் நகர நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்