கொரோனா பரபரப்பு.! சித்தவைத்தியர்களை அழைத்து தமிழக அரசு பேசவேண்டும்! சட்டசபையில் முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!

சென்னை.மார்ச்.21.,

இன்று சட்டப்பேரவையில் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசியதாவது…

நமது பாரம்பரிய சித்த வைத்தியர்கள் சிறப்பான மருத்துவ பயன்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அவர்களை தமிழ் மருத்துவர்கள் அல்லது பாரம்பரிய வைத்தியர்கள் என்றோ பட்டமிட்டு அழைக்க தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அது போல, கொரோனா வைரஸ் தொடர்பாக அவர்களை அரசு அழைத்து பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கனவே டெங்கு, சிக்கன் குன்யா நோய்களுக்கு அவர்கள் தான் பப்பாளி இலை, நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை மருத்துவ தீர்வாக அளித்ததை நினைவூட்டுகிறேன்.

தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவரான தணிகாச்சலம் அவர்கள் வைரஸ் காய்ச்சல் குறித்து தனது மருத்துவ அறிக்கையை ஐ.நா-வில் சமர்பித்திருக்கிறார்.

அவரையும் அழைத்து, National institute of Siddha Science நிறுவனத்துடன் இணைந்து, சித்த வைத்தியர்களையும் அழைத்து பேச வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சகத்தை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசியதும், சுகாதரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எழுந்து இவற்றை நல்ல, அரிய ஆலோசனைகள் என்று வரவேற்று அது குறித்த விபரங்களை விளக்கி பேசினார்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்
21-03-2020