புதுகை கிழக்கு மாவட்ட MJTS செயலாளர் இல்ல திருமண விழா..! மஜக பொதுச்செயலாளர் நேரில் வந்து வாழ்த்து..!!

புதுகை.ஜூலை.12., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் தொழிற் சங்கமான #மனிதநேய_ஜனநாயக_தொழிற்_சங்கம் (#MJTS) மாவட்ட செயலாளர் T.ஷாஜி தீன் இல்ல திருமண விழா நேற்று (11.07.2018) மாலை கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்றது.

இதில் அழைப்பினை ஏற்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்.

இதனை அடுத்து பல்வேறு இளைஞர்கள் தன்னெழுச்சியாக பொதுச்செயலாளர் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் மஜக துணை பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொறுப்பாளர் கோட்டை ஹாரிஸ், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, மணமேல்குடி ஒன்றிய செயலாளர் முகம்மது மைதீன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, கோட்டைப்பட்டினம் நகர நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்