கோட்டைப்பட்டினம் கடற்கரை பகுதியில் வெள்ள நிவாரண நிதி திரட்டிய மஜகவினர்..!!

புதுகை.ஆக.19., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் கேரளா மலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் பணியில் மஜகவினர் கடற்கரை பகுதியில் இறங்கினர்.

கடற்கரை பகுதியில் தன்னார்வமாக நிதி திரட்டும் பெட்டிகளில் தங்களால் இயன்ற பங்களிப்பினை வாழங்கியவுடன், இந்த தன்னலமற்ற பணியினை வெகுவாக பாராட்டினர்.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொறுப்பாளர் கோட்டை ஹாரிஸ், MJTS மாவட்ட செயலாளர் ஷாஜி தீன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் முஜிபு ரஹ்மான், ஒன்றிய செயலாளர் முகம்மது மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் கான் உட்பட மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முதற்கட்டமாக இந்த நிதி திரட்டும் பணியின் மூலம் கோட்டைப்பட்டினம் பகுதியில் மட்டும் ₹34,530 வசூலாகி உள்ளது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
19.08.2018