வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக), அபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம். 12.01.18
MJTS – மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம்
கோவை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு கமிட்டியில் இணைந்தது மஜகவின் MJTS..!
கோவை.டிச.09., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று தொழிற்சங்க மாவட்டசெயலாளர் ABS.அப்பாஸ், அவர்கள் தலைமையில் கோவை மாவட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க கூட்டு கமிட்டியின் தலைவர் சுகுமாரன், அவர்களை சந்தித்து கூட்டு கமிட்டியில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் இணைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அக்கீம், தொழிற்சங்க பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் கூட்டு கமிட்டி நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கோவை_மாநகர்_மாவட்டம் 09.12.2017
கோவையில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க நிர்வாகக் குழுகூட்டம்..!
கோவை.அக்.10., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க (MJTS) நிர்வாகக் கூட்டம் மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மஜக மாவட்ட துணை செயலாளர் ABT.பாருக், மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் சுதீர், மக்கான் ஜாபர் ஆகியோர் கலந்துகொண்டனர், இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. 1. மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தை கோவை மாவட்ட அனைத்து கட்சி தொழிற் சங்க கூட்டு கமிட்டியில் இணைப்பது என தீர்மானிக்கப்பட்டது, 2.தொழிற் சங்கத்தின் பகுதி மற்றும் கிளை நிர்வாகிகளை சந்தித்து தொழிற் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசிப்பது என தீர்மானிக்கப்பட்டது, 4. 24/09/2017 அன்று கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நடைபெற்ற பிரம்மாண்ட பொதுகூட்டத்தை நடத்திய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 10.10.17