வேலூர்.அக்.23., ஆம்பூரில் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் M.ஜஹிருஸ் ஜமா தலைமையில் மாவட்ட பொறுப்பு குழு S.M. ஷானவாஸ், P.M.ஷபீயுல்லாஹ் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற இந்த நகர செயற்குழுவில் வருகின்ற டிசம்பர்-6 இரயில் நிலைய முற்றுகையிடுவது மற்றும் ஆம்பூர் நகர 36- வார்டுகளிலும் கிளைகள் அமைத்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வின் முடிவில் ஆம்பூர் நகர தமுமுக மருத்துவ அணி செயலாளர் முன்னா என்பவர் தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டார். பின் பல்வேறு சகோதரர் இணைந்து அவர்களுக்கு உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது. இதில் மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம் B.Sc, வேலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் முஹம்மத் ஜாபர், வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ரபீக் ரப்பானி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஆம்பூர்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம்
மஜக மருத்துவ சேவை அணி
மஜக மருத்துவ சேவை அணி
சென்னை பெரம்பூர் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!
சென்னை.அக்.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி முத்தமிழ் நகரின் சார்பாக இன்று (22/10/2017) காலை 11.00 மணியளவில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாபெரும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணைச் செயலாளர் புது மடம் அனிஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமை தொடங்கி வைத்தனர். இம்முகாமில் பெரம்பூர் பகுதி செயலாளர் அக்பர், பகுதி பொருளாளர் அப்துல் ரஷித் மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தினை வழங்கினர். பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் அறுந்தியும், வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு வாங்கிச்சென்றும் பயன்பெற்றனர். மஜகவின் இந்த மனிதநேய பணிகளை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வட_சென்னை_மாவட்டம்
காட்பாடி T.K.புரம் கிளை சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!
வேலூர்.அக்.22, வேலூர் கிழக்கு மாவட்டம் காட்பாடி ஒன்றியம் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) T.K.புரம் ஊராட்சி கிளை சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி பள்ளி அருகில் காலை 8.30 மணியளவில் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் முஹம்மத் வசீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் முஹம்மத் ஜாபர், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபீக் ரப்பானி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மஜக வேலூர் மாநகர முன்னால் துணை செயலாளர் இம்தியாஸ், T.K.புரம் கிளை செயலாளர் முனீர், கிளை பொருளாளர் இக்பால், துணை செயலாளர்கள் அப்ரோஸ், மஹபூப், 15வது வார்டு கிளை செயலாளர் முஹம்மத் ஆசிப், கிளை துணை செயலாளர் நவாஸ், 53 வது வார்டு கிளை செயலாளர் ஜியாவுத்தின் கலீம், முன்னா, சாதிக், அல்லாபகஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பெரியோர்கள், சிறுவர்கள் என பொதுமக்கள் சுமார் 500 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம் 22.10.2017
மஜக சார்பில் சென்னை அடையாரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!
சென்னை.அக்.20., மனிதநேய ஜனநாயக கட்சி தென்சென்னை மாவட்டம், வேளச்சேரி பகுதி சார்பாக அடையாரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் இன்று (20.10.2017) மதியம் 2.00 மணியளவில் நடைப்பெற்றது. இம்முகாம் வேளச்சேரி பகுதி செயலாளர் அடையார். அன்வர்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் திருமங்கலம் ஜெ.ஷமீம் அஹமது கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். மேலும் தென்சென்னை மாவட்ட செயலாளர் அடையார்.இக்பால் மற்றும் பகுதி நிர்வாகிகள், அபுபக்கர், பீர் முஹம்மது, இக்பால், நாகூர் மீரான், செய்யது, சேக், உமர், ஜாகீர், ஜூபையர், ஜப்பார், ஜாபர், நவ்ஷாத் மற்றும் தொழில் அதிபர் சேட் ஃபர்னிச்சீங் சேட் பாய் உள்ளிட்ட பகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார்கள். இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் அருந்தி பயன் அடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேளச்சேரி_பகுதி #தென்சென்னை_மாவட்டம்.
தொண்டி பேரூர் மஜக சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..
தொண்டி.அக்.18., மனிதநேய ஜனநாயக கட்சி(மஜக) தொண்டி பேரூர் கிளை சார்பாக பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நேற்று (17.10.17) காலை 8மணியளவில் நடைபெற்றது. இம்முகாம் மஜக நகர செயலாளர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் Dr. சோனை முத்து மற்றும் சித்த மருத்துவ அலுவலர் Dr. ராஹீமா பானு ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். மேலும் காவல் ஆய்வாளர் நஸீர், துணை ஆய்வாளர் சுல்தான் இப்ராஹீம், ARD தொண்டு நிறுவன பணியாளர்கள் செல்வ ராணி மற்றும் ஏஞ்சல் மேரி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தொண்டி_நகரம்