(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) இந்திய துணைக்கண்டம் என புகழப்படும் இந்திய நாட்டின் 71 - வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். சிராஜ் உத்தௌலா , ஜான்ஸிராணி லெட்சுமிபாய் , பகதூர்ஷா , பூலித்தேவன் , தீரன் சின்னமலை , தீரன் திப்புசுல்தான் , குயிலி , வீரன் அழகுமுத்துக்கோன் , கட்டபொம்மன் , காந்தியடிகள் , நேரு , நேதாஜி , அபுல்கலாம் ஆசாத் என பல்வேறு கட்டங்களில் பல்வேறு வடிவங்களில் நமது முன்னோர்கள் இந்திய விடுதலைக்காக போராடி தியாகங்களை புரிந்தனர். இன்று நமது சுதந்திரத்தை பாதுகாக்கும் பெரும் பணி நம் முன்னே காத்துக்கிடக்கிறது. மதவெறி, சாதிவெறி , பயங்கரவாதம் , ஊழல் , கனிமவள சுரண்டல் , விவசாய நிலங்களை இழத்தல் , நீராதாரங்கள் ஆக்கிரமிப்பு என பெரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராட வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. அந்த எண்ணங்களோடு , அமைதியான தாயகத்தை கட்டமைக்க அனைவரும் உறுதியேற்போம் எனக்கூறி , மீண்டும் எமது சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துக்
அறிக்கைகள்
முரசொலிக்கு மஜக சார்பில் பவளவிழா வாழ்த்து !
(முரசொலி பவளவிழாவில் பங்கேற்க மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , தனியரசு MLA , கருணாஸ் MLA ஆகியோருக்கு திமுக செயல் தலைவர் மாண்புமிகு அண்ணன் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். மற்ற இருவரும் அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்கள். மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் அண்ணன் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துசெய்தி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது…,) தமிழ் சமுதாயத்தில் கடந்த 75 ஆண்டுகாலமாக மாபெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஊடகமாக முரசொலி திகழ்ந்து வருகிறது. கலைஞரின் முயற்சியில் உருவாகி , அவரால் 75 ஆண்டுகளாக இப்பத்திரிக்கை வழிநடத்தப்பட்டிருக்கிறது என்பது பெரும் ஆச்சர்யத்தை தருகிறது. ஒரு ஊடகத்தை உருவாக்கியவரின் தலைமையிலேயே , அது 75 ஆண்டுகள் இயங்கி வருவதும் , அந்த நிறுவனமும் , உருவாக்கியவரும் 75 ஆண்டுகள் ஒன்றாய் பயணிப்பதும் ஒரு அரிய வரலாற்று நிகழ்வாகும் . எத்தனையோ சாதனைகளை நிகழ்த்திய கலைஞரின் சாதனைகளில் அதுவும் ஒன்றாகும். முரசொலி , அரசியல் தாக்கத்தை கடந்து , சமுதாய விழிப்புணர்வு பணிகளிலும் சமரசமின்றி அறிவொளியை பாய்ச்சிய பத்திரிக்கை என்பது அதன் கூடுதல்
பாராளுமன்றத்தில் தமிழை இழிவுபடுத்துவதா? தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் கண்டனம்!
(தமிழக கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் உ.தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் M.சேது கருணாஸ் MLA ஆகியோர் கூட்டாக வெளியிடும் அறிக்கை) நேற்று நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் மாண்புமிகு தம்பிதுரை அவர்கள் தமிழில் பேசும்போது அதற்கு நாடாளுமன்றத்தில் வட இந்திய எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அவர் தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டு ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார். இது தமிழை அவமதிக்கும் செயலாகும் அப்பட்டமான மொழிவெறி என்பதிலும் ஐயமில்லை. இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக தமிழ் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியிலும் பேசலாம் என்று விதி இருக்கிறது. இந்தியில் ஒருவர் பேச உரிமை இருக்கும்போது, தமிழிலும் பேச உரிமை இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த துணை சபாநாயகர் தமிழில் பேசியதை இடையூறு செய்து தடுத்து நிறுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான இது போன்ற செயல்கள் நாடாளுமன்றத்திலேயே அரங்கேறுவது கடும் வேதனையளிக்கிறது. தமிழர்களை நோகடிக்கும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது. இது குறித்து பிரதமர் மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் உரிய விளக்கம் அளித்து , இதுபோன்ற
தமிழக முதல்வருக்கு தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் கூட்டாக நினைவூட்டல் கடிதம்!
ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்க! பேரறிவாளனுக்கு பரோல் வழங்குக! தமிழக முதல்வருக்கு தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் கூட்டாக நினைவூட்டல் கடிதம்! தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA , மஜக பொதுச்செயலாளர் M. தமிமும் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் தமிழக முதல்வருக்கு கூட்டாக கையெழுத்திட்டு இன்று (10.08.17) கடிதம் எழுதியுள்ளனர். இன்று தலைமை செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது.... நீண்ட காலமாக சிறையில் வாடும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக் கோரியும், ஐயா MGR அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளை கடந்து சிறையில் வாடும், பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை முன்விடுதலை செய்வது குறித்து நாங்கள் சட்டமன்றத்தில் பேசியுள்ளோம். தங்களிடம் நேரிலும் விரிவாக வலியுறுத்தி பேசியுள்ளோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்றத்தில் தாங்கள் பதிலளித்தது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது. இவ்விஷயத்தில் கால தாமதம் செய்யாமல் வாய்ப்பிருந்தால்; ஆகஸ்ட் 15 அன்று 71 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு உரிய அறிவிப்புகளை இது குறித்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதில் மனிதநேயத்தோடு தாங்கள் எடுக்கும் முயற்சிகளை வருங்காலமும் வரலாறும்
ராகுல் காந்தி கார் மீது தாக்குதல்! மஜக கடும் கண்டனம்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை) #காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத்தலைவர் #திரு_ராகுல்_காந்தி அவர்கள் குஜராத்தில் மழை - வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற போது , அவரது கார் மீது நடத்திய கல்லெறித்தாக்குதலில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கிறது. இயற்கை பேரிடரின் போது மக்களுக்கு ஆறுதல் கூற வந்த ஒரு தேசிய தலைவரை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டு, கண்டன கோஷங்களை எழுப்பி, பிரதமர் மோடியை வாழ்த்தி தாக்குதல் நடத்தியிருப்பது ஒரு கேவலமான அரசியலாகும். இதை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பா ஜ க ஆளும் குஜராத் மாநிலத்தில் எதிர்கட்சிகளின் ஜனநாயக உரிமைகளும், மக்கள் நல செயல்பாடுகளும் முடக்கப்படுவதன் தொடர்ச்சியாகவே இச்செயலை பார்க்க முடிகிறது. பா ஜ க உள்ளிட்ட காவி மதவாத சக்திகளிடம் அரசியல் சகிப்புத்தன்மையும், நாகரீகமும், பொறுமையும் குறைந்து வருவதை இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும், ஒரு பெரிய கட்சியின் தேசிய தலைவருக்கே, பாதுகாப்பற்ற ஒரு சூழல் உருவாகியிருப்பதற்கு நாட்டை ஆளும் பா ஜ க வின் செயல்பாடுகள் தான் காரணமாகும். அரசியல் வன்முறைகளுக்கு