மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் முகமது தாரிக், அவர்கள் கடந்த வாரம் பணியின் போது மின்சாரம் தாக்கியதில் விபத்துக்குள்ளாகி நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதை தொடர்ந்து நெல்லை வருகை தந்த மஜக வின் மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது, அவர்கள் மருத்துவமனைக்கு சென்று அவரை நலம் விசாரித்தார், பின்னர் அவரின் பெற்றோர்களிடம் உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார். அவருடன் மாநில துணைச் செயலாளர் A.R.சாகுல் ஹமீது, தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் முகமது நஜிப், பொருளாளர் ராசுகுட்டி, மாவட்ட துணைச் செயலாளர் மீராசாஹிப், அய்யனார் ஊத்து அன்சாரி, சங்கரன் கோவில் பீர் மைதீன், ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 18.07.2021
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து நெல்லையில் போராட்டம்.! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது கண்டன உரையாற்றினார்.!!
நெல்லை.ஜூலை.19., சாமானியர்களை பெரிதும் பாதிக்கும் வகையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவை வரலாறு காணாத வகையில் விலை ஏற்றம் அடைந்துள்ளது. விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக பேட்டையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் தலைமை தாங்கினார், மாவட்ட துணைச் செயலாளர் இரா.முத்துக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். மேலும் மஜக மாநில துணைசெயலாளர் A.R.சாகுல்ஹமீது, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தென்மண்டல பொறுப்பாளர் நெல்லை செல்வம், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மஜக மாநில பொருளாளர் அவர்கள் ஒன்றிய அரசு தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சி புரிவதாகவும். தினம் தினம் விலை உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு கட்டுபடுத்த தவறினால், நாடு மிகப்பெரிய மக்கள் எழுச்சி போராட்டங்களை
தமிழக அரசுக்கு பாராட்டு! கர்நாடக அரசுக்கு கண்டனம்! மஜக தலைமை நிர்வாக குழுவின் தீர்மானங்கள்!
சென்னை.ஜூலை.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் இன்று 12.07.2021 தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவைத் தலைவர் நாசர் உமரி, இணைப் பொதுச்செயலாளர் J.S.ரிபாயி, துணைப் பொதுச்செயலாளர்கள் செய்யது பாரூக், மண்டலம் ஜைனுல்லாபுதீன், கோவை சுல்தான் அமீர், என்.ஏ.தைமிய்யா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுத்தீன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் கட்சியின் தற்போதைய செயல்பாடுகள், புதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மண்டல வாரியாக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வளர்ச்சி பணிகளை முடுக்கி விடுவது என்றும், எதிர்வரும் ஆகஸ்ட் 5 அன்று சிறப்பு நிர்வாகக் குழுவை கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. நிறைவாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. https://m.facebook.com/story.php?story_fbid=3575720782527671&id=700424783390633 1) புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி தலைமையிலான திமுக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்பட்டதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும், மாநில உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் திமுக ஆட்சி செயல்பட்டு வருவது அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக முதல்வர்
அடையார் கேன்சர் இன்ஸ்டியூடிற்கு மஜக நன்கொடை..!
மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது நேரில் வழங்கினார்.!! சென்னை.ஜூன்.23., சென்னை அடையாரில் செயல்பட்டு வரும் கேன்சர் இன்ஸ்டியூட்டிற்கு மருத்துவ தேவைக்காக தமிழகம் முழுவதில் இருந்தும் மக்கள் வருகை தருகிறார்கள். கேன்சர் இன்ஸ்டியூடின் அடிப்படை தேவைகளுக்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நன்கொடை வழங்க நேற்று (22.06.2021) மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் நேரில் சென்று முதல்கட்டமாக காசோலை மூலமாக நன்கொடையை மருத்துவமனையின் டைரக்டர் சாகர் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மி, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் பசீர் அஹமது ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 22.06.2021
தமுமுக மூத்ததலைவர் குனங்குடி ஹனிபா அவர்கள் மருத்துவமனையில் அனுமதி..! மஜக பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு..!!
சென்னை.ஜூன்.22., தமுமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான குனங்குடி ஹனிபா அவர்கள் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணை பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் தலைமை செயற்குழு உறுப்பினர் பசீர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், வட சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் முஹம்மது அக்பர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அப்துல் ரஷீத், வட சென்னை மேற்கு மாவட்ட 35-வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி, 34 வட்ட பொருளாளர் யாஸின், 35 வட்ட துணைச் செயலாளர் நாவஸ் கனி, துறைமுக பகுதி நிர்வாகிகள் அபூபக்கர், அசன் அலி ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 22.06.2021