அடையார் கேன்சர் இன்ஸ்டியூடிற்கு மஜக நன்கொடை..!

மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது நேரில் வழங்கினார்.!!

சென்னை.ஜூன்.23., சென்னை அடையாரில் செயல்பட்டு வரும் கேன்சர் இன்ஸ்டியூட்டிற்கு மருத்துவ தேவைக்காக தமிழகம் முழுவதில் இருந்தும் மக்கள் வருகை தருகிறார்கள்.

கேன்சர் இன்ஸ்டியூடின் அடிப்படை தேவைகளுக்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நன்கொடை வழங்க நேற்று (22.06.2021) மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் நேரில் சென்று முதல்கட்டமாக காசோலை மூலமாக நன்கொடையை மருத்துவமனையின் டைரக்டர் சாகர் அவர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மி, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் பசீர் அஹமது ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
22.06.2021