தமுமுக மூத்ததலைவர் குனங்குடி ஹனிபா அவர்கள் மருத்துவமனையில் அனுமதி..! மஜக பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு..!!

சென்னை.ஜூன்.22., தமுமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான குனங்குடி ஹனிபா அவர்கள் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணை பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

மேலும் தலைமை செயற்குழு உறுப்பினர் பசீர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், வட சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் முஹம்மது அக்பர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அப்துல் ரஷீத், வட சென்னை மேற்கு மாவட்ட 35-வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி, 34 வட்ட பொருளாளர் யாஸின், 35 வட்ட துணைச் செயலாளர் நாவஸ் கனி, துறைமுக பகுதி நிர்வாகிகள் அபூபக்கர், அசன் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
22.06.2021